Advertisment

Medical Shops Bandh : நாடு முழுவதும் மருத்து கடைகள் இன்று கடையடைப்பு! தமிழகத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைப்பு!!

Medical Shops Bandh Today Due to Center's Stand on Online Pharmacies: மருந்து வணிகர்கள் நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

MEDICINE, மருந்து கடைகள், Medical Shops Bandh

Medical Shops Bandh Today in All Over India:  ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து, மருந்து வணிகர்கள் நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

Advertisment

ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசு கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்டது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது நாடு முழுவதும் மருந்து கடைகள் செயல்பாட்டை பாதித்துள்ளது.

Medical Shops Bandh : நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு :

டாக்டரின் பரிந்துரை சீட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும் என்று ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றன. குறிப்பிட்ட சில பிரிவு மருந்துகளை டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. எந்த டாக்டர், எந்த மருந்தை பரிந்துரைப்பார் என்பது மருந்துக்கடை நடத்துபவர்களுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளனர்.

போலியாக டாக்டரின் பரிந்துரை சீட்டை உருவாக்கி, ஆன்லைன் மருந்து நிறுவனங்களில் இருந்து மருந்துகளை வாங்க முடியும். இது மருந்து விற்பனை விதிகளுக்கு முரணானது. இதை கண்டித்து இன்று (28.9.18) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தமிழத்தில் 30 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்பட நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் இன்று மூடப்பட்டிருக்கும். இந்த கடையடைப்பு போராட்டத்தால் தமிழக அரசுக்கு ₹15 கோடி வரியிழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment