Advertisment

பி.எம் கேர்ஸ் நிதியை பயன்படுத்தி 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்; பிரதமர் மோடி உத்தரவு

நாட்டில் பல மருத்துவமனைகள் மருத்துவ ஆக்ஸிஜன் கடும் தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்துள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
pm cares fund, 551 oxygen generation plants, coronavirus pandemic, கொரோனா வைரஸ், கோவிட் 19, பிஎம் கேர்ஸ் நிதி, 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள், பிரதமர் மோடி, covid 19, pm narendra modi

நாடு முழுவதும் பொது சுகாதார மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு பி.எம். கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. விரைவில் செயல்படக்கூடிய இந்த ஆலைகள், மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்யும் என்று பிரதம அலுவலகம் கூறியுள்ளது.

Advertisment

நாட்டில் பல மருத்துவமனைகள் மருத்துவ ஆக்ஸிஜன் கடும் தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்துள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை அதிகரிப்பதற்கு பிரதமரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, 551 பிரத்தியேக அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பி.எம்.கேர்ஸ் நிதி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலைகள் மாவட்ட அளவில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியதாக பிரதமர் மோடி கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் அமைக்கப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தி வசதியானது மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தின் அன்றாட மருத்துவ ஆக்ஸிஜன் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொது சுகாதார மருத்துவமனைகளில் கூடுதலாக 162 பிரத்யேக பி.எஸ்.ஏ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ பி.எம் கேர்ஸ் நிதி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.20.58 கோடியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment