கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பிரதமர் குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால சூழல் நிவாரணம் நிதிக்காக பிரதமர் மோடி தொடங்கியுள்ள பி.எம்-கேர்ஸ் பொது நிவாரண நிதி...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பிரதமர் குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால சூழல் நிவாரணம் நிதிக்காக பிரதமர் மோடி தொடங்கியுள்ள பி.எம்-கேர்ஸ் பொது நிவாரண நிதி வங்கி கணக்குக்கு எப்படி நன்கொடை அளிப்பது என்பதை நிதி அளிக்க விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகோள்ள வேண்டியது அவசியம்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் உள்ளார். இதில் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

PM CARES நிதிக்கு நன்கொடை வழங்க விருப்பமுள்ள குடிமக்கள், அமைப்புகள், நிறுவனங்கள் pmindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று லாக் இன் செய்து பின்வரும் விவரங்களை அளித்து நிதியளிக்கலாம்.

பிஎம் கேர்ஸ் (PM CARES) பொதுமக்கள் மற்று அமைப்புகள், நிறுவனங்கள் நிதி வழங்குவது எப்படி என்பது குறித்து கீழே தரப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு பெயர்: PM CARES

வங்கி கணக்கு எண்: 2121PM20202

IFSC குறியீடு: SBIN0000691

ஸ்விஃப்ட் குறியீடு: SBININBB104

வங்கி மற்றும் கிளையின் பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, புது தில்லி பிரதான கிளை

UPI ஐடி: pmcares @ sbi

பொதுமக்கள் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், இன்டர்நெட் வங்கி, யுபிஐ (பிஹெச்எம், ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக் போன்றவை), ஆர்டிஜிஎஸ் / நெஃப்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

இந்தியாவில் தற்போது 918-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 19 பேர் பலியாகி உள்ளனர்.

பிரதமர் மோடி நிவாரண நிதி மக்களிடம் நிவாரண நிதி அளிக்க வேண்டுகோள்விடுத்து அறிவித்த உடனே பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது சேமிப்பிலிருந்து ரூ.25 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
வருண் தவான் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.30 லட்சமும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.31 லட்சம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள். பஞ்சாபி பாடகர் குரு ரந்தவாவும் பிரதமர் நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close