Advertisment

77 அமைச்சர்கள்.. 8 குழுக்கள்.. பிரதமர் மோடியின் பிளான்!

ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது முதல் பத்து அமைச்சர்களும் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளராக ஒரு மத்திய அமைச்சரும் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது

author-image
WebDesk
New Update
77 அமைச்சர்கள்.. 8 குழுக்கள்.. பிரதமர் மோடியின் பிளான்!

பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களை உள்ளடக்கிய 8 குழுக்களை பிரித்துள்ளார். 

Advertisment

தொழில்நுட்ப அடிப்படையிலான வளங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குழுக்களில்  ஆள் சேர்ப்பதற்கு, நிபுணர்குழுவை உருவாக்குவது, அனைத்து அமைச்சர்களின் அரசாங்க செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவது என மோடி அரசாங்கத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்த இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கவுன்சில் கூட்டத்தில், சிந்தனை முறை அடிப்படையில், அமைச்சர்களை எட்டு குழுக்க்காளக பிரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு கூட்டமும் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடைபெற்றது.

இதுபோன்று மொத்தம் ஐந்து அமர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு அமர்விலும் தனிப்பட்ட செயல்திறன், அமைச்சகத்தின் செயல்பாடு, பங்குதாரர்களின் ஈடுபாடு, கட்சி ஒருங்கிணைப்பு, மற்றும் பயனுள்ள தொடர்பு இறுதியாக பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கடைசி சிந்தனை அமர்வு கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டங்கள் அனைத்தும் மோடி அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் விநியோக முறையை மேம்படுத்துவதில் முதன்மையாக கவனம் செலுத்தியது.

கவுன்சிலில் உள்ள 77 அமைச்சர்களும் இந்த எட்டு குழுக்களில் ஒரு பகுதியாக உள்ளனர், ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது முதல் பத்து அமைச்சர்களும் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளராக ஒரு மத்திய அமைச்சரும் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்திலும் ஒரு இணைய முகப்பை உருவாக்கி அதன்மூலம், மையத்தின் முதன்மையான திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் செயல்திறன் பற்றிய அறிவிப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறை, கூட்டங்களை திட்டமிடுவதற்கான அமைப்பு மற்றும் கடிதப் பரிமாற்றங்களை நிர்வகித்தல் ஆகியவை இந்தக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் அடங்கும். அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் சுயவிவரங்களை உருவாக்கவும், பங்குதாரர்களின் ஈடுபாடு திட்டங்களை உருவாக்கவும் இந்த குழு வற்புறுத்தப்பட்டுள்ளத்து.

மேலும், ஆராய்ச்சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்ற 3 இளம் தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழு அமைப்பதுற்கு மற்றொரு குழுவின் பணி ஆகும். இதேபோல், ஓய்வுபெறும் ஊழியர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பராமரிக்கும் இணைய முகப்பை உருவாக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர் ஆகியோர் இருப்பார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற http:/t.me/ietamil

Pm Modi Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment