Advertisment

விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர்; எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புகிறார்கள்

பிரதமர் மோடி 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நடத்தைய உரையாடலில், எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் அரசியல் செய்வதாக விமர்சனம் செய்தார்.

author-image
WebDesk
New Update
PM Kisan Nidhi, Narendra Modi, Modi farmers interaction, PM Modi interacts with farmers, பிரதமர் மோடி, Farmers protest, Farm laws, விவசாயிகள் உடன் பிரதமர் உரையாடல், விவசாயிகள் போராட்டம், Tamil Indian Express

பிரதமர் மோடி 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நடத்தைய உரையாடலில், எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் அரசியல் செய்வதாக விமர்சனம் செய்தார்.

Advertisment

பிரதமர் மோடி, இன்று 6 மாநிலங்களின் விவசாயிகளுடன் ஒரு உரையாடலை நடத்தினார். அப்போது, “சில கட்சிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் ஒரு அரசியல் உள்நோக்கத்தை முன்வைக்கின்றன. ஒப்பந்த விவசாயத்தில் விவசாயிகள் நுழைந்தால் நிலம் பறிக்கப்படும் என்று சிலர் கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புகிறார்கள்” என்றார்.

விவசாயிகள் சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தடை ஏற்பட்டுள்ள நேரத்தில் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக இந்த உரையாடல் இருந்தது. டெல்லி எல்லைகளில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெறும் மிகப்பெரிய விவசாயிகளின் போராட்டம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளை போராட்ட களத்துக்கு ஈர்த்துள்ளது.

விவசாயிகளுடனான உரையாடலில் பேசிய பிரதமர் மோடி, “போராட்டம் தொடங்கியபோது அவர்களின் கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உறுதி செய்ய வேண்டும் என்பதாக இருந்தது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் விவசாயிகள் என்பதால் அவர்களுக்கு உண்மையாகவே பிரச்சினைகள் இருந்தன. ஆனால், பின்னர் அரசியல் சித்தாந்தம் உள்ளவர்கள் அந்த போராட்டத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டனர்” என்று கூறினார்.

“எம்.எஸ்.பி உள்ளிட்டவை தீர்க்கப்படது. ஆனால், இப்போது என்ன நடக்கிறது. வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்… அவர்கள் நெடுஞ்சாலைகளுக்கு கட்டணமில்லாமல் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் ஏன் விவசாயிகளின் பிரச்சினைகளிலிருந்து புதிய கோரிக்கைகளுக்கு மாறினார்கள்” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் விவசாயிகளை தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

நில அபகரிப்பு புகாரில் ஊடகங்களில் பெயர்கள் வெளியான சிலர் இப்போது விவசாயிகளின் நிலம் குறித்து கவலை தெரிவித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா முழுவதும் ஏராளமான விவசாயிகள் புதிய சட்டங்களை வரவேற்றுள்ளனர். ஏற்கனவே, பலன்களைப் பெற்றுவருகிறார்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், மாநிலங்கள் முழுவதும் பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை பட்டியலிட்டார். இந்த தேர்தல்களில் விவசாயிகள் முக்கிய வாக்காளர்களாக இருந்தனர். அது போராட்டம் நடைபெறும் பகுதிகளையும் உள்ளடக்கியது என்று கூறினார்.

“நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விவசாய சீர்திருத்தங்களை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். நான் உங்களை வீழ்த்த மாட்டேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார். அரசாங்கம் 1,000-க்கும் மேற்பட்ட மண்டிகலை ஆன்லைனில் இணைத்துள்ளது. அங்கே ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வர்த்தகம் உள்ளது. அந்த இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் கீழ் சமீபத்தில் ஒன்பது கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

பாஜகவின் இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பிற மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

டெல்லியில் உள்ள கிஷன்கர் கிராமத்தில் விவசாயிகள் இடையே பேசிய அமித்ஷா, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். மண்டிகள் மூடப்படாது. பெரு நிறுவனங்கள் விவசாயிகளின் நிலத்தை பறிக்காது. எதிர்க்கட்சிகள் வெட்கக்கேடான பொய்களை பரப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment