Advertisment

பிரதமர் மோடியின் கணக்கு ஹேக் விவகாரம்: ட்விட்டர், கூகுளை விசாரிக்க முடிவு

பிட்காயின் தொடர்பாக பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு இரண்டாவது முறையாக ஹேக் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பிரதமர் மோடியின் கணக்கு ஹேக் விவகாரம்: ட்விட்டர், கூகுளை விசாரிக்க முடிவு

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில், ட்விட்டர் மற்றும் கூகுள் நிறுவனம் வரை விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் தேசிய நோடல் ஏஜென்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம், இச்சம்பவம் குறித்து ட்விட்டர், கூகுளிடம் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பிரதமரின் கணக்கில் மற்றொரு நபர் நுழைய முயற்சித்த போது, தானியங்கி சிஸ்டமால் ஏன் அலர்ட் செய்யப்படவில்லை என ட்விட்டர் நிறுவனத்திடமும், பிட்காயின் ட்வீட்டுடன் இணைக்கப்பட்ட ப்ளாக்ஸ்பாட் கணக்கின் விவரங்களை வழங்குமாறு கூகுளிடமும் கேட்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து கூகுள், ட்விட்டரிம் விவரங்களை கேட்போம். Cert-In தனது விசாரணை அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையானது இணைச் செயலர் அளவிலான அதிகாரியால் வழிநடத்தப்படும்" என்றார்.

இதுதொடர்பாக ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்திடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்கையில், தற்போதைய விசாரணைபடி, ட்விட்டர் பாதுகாப்பு சிஸ்டத்தை மீறி கணக்கு ஹேக் செய்யப்பட்டவில்லை என்று கூறினர்.

ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரதமரின் அலுவலகத்துடன் எங்களிடம் 24×7 டெரக்ட் கம்யூனிகேஷன் உள்ளது. இச்சம்பவத்தை அறிந்ததும் ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்டெுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். விசாரணையில், வேறு எந்த கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை 2.11 மணிஅளவில், இந்தியாவில் பிட்காயினை அதிகாரபூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது. ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டறிந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், உடனடியாக ட்விட்டர் கணக்கை மீட்டெடுத்து அந்த பதிவுகளை ஒரு மணி நேரத்திற்குள் டெலிட் செய்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.

பிட்காயின் தொடர்பாக பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குகள் இரண்டாவது முறையாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2020 இல், மோடியின் தனிப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு அடையாளம் தெரியாத நபரால் ஹேக் செய்யப்பட்டு, பிட்காயின் மூலமாக கொரோனா நிதியுதவி தருமாறு வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பராக் ஒபாமா, கன்யே வெஸ்ட், பில் கேட்ஸ் முதல் எலோன் மஸ்க் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, “பிட்காயினை அனுப்புங்கள், பிரபலமானவர்கள் உங்கள் பணத்தை இரட்டிப்பாக திருப்பி அனுப்புவார்கள்” என்ற செய்தியை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment