பிரதமர் அறிமுகம் செய்த "சௌபாக்யா யோஜனா" திட்டம் - அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்!

'சௌபாக்யா யோஜனா' எனும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு உறுதி

‘சௌபாக்யா யோஜனா’ எனும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வசதி இல்லாதவர்கள் ரூ.500 செலுத்தி மின் இணைப்பைப் பெறலாம். 10 மாத தவணையில் ரூ.500 செலுத்தியும் மின் இணைப்பை பெறலாம். இதன் மூலம், 2018-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணென்ணெய் பயன்பாட்டை முற்றிலும் நீக்கி சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்த குழு வழங்கும். நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராயை குழுவின் தலைவராக நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

×Close
×Close