Advertisment

மாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை... பின்னணி என்ன?

PM Modi Plogging at beach collected plastic waste what happened:பிரதமர் மோடி முறைசாரா உச்சி மாநாடு நிகழ்ச்சியின்போது, மாமல்லபுரம் கடற்கரையில், நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அங்கே இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த நிகழ்வு திட்டமிட்டு படமாக்கப்பட்டதா என்பது குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில் அது முடிவுக்கு வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi Plogging at beach in Mamallapuram, PM Modi collected plastic wastes video, PM Modi collected plastic wastes controversy by Karti Chidambaram tweet,கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடி, கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி, நடந்தது என்ன? what happened really in PM Modi Plogging at beach, PM Modi, Congress MP Karti Chidambaram, BJP, Congress,

மாமல்லபுரத்தில் கடந்த11, 12 ஆம் தேதி பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. அக்டோபர் 12 ஆம் தேதி காலையில் மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி சென்ற பிரதமர் மோடி கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து ஒரு பையில் போட்டு அங்கே இருந்த பணியாளர் ஒருவரிடம் கொடுத்தார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிந்திருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

பிரதமர் அந்த டுவிட்டர் வீடியோ பதிவில், மாமல்லபுரம் கடற்கரையில் காலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபயிற்சி மேற்கொண்டேன். அப்போது என்னுடைய பிளாஸ்டிக் குப்பை சேகரிப்புகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ்ஜிடம் அளித்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வதை நாம் உறுதி செய்யவேண்டும். நாம் ஆரோக்கியமாகவும் உடல் வலிமையுடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடி தூய்மை இந்தியா என்று வெறுமனே வார்த்தை அளவில் மட்டும் சொல்லாமல் செயலிலும் செய்து காட்டியுள்ளார் என்று பிரதமரின் செயலை பலரும் பாராட்டி புகழ்ந்தனர். சிலர், பிரதமர் மோடி இதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்றும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று தலைப்பிட்டு பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் போட்டோக்களையும் அதனுடன் ஒரு குழுவின் படம்பிடிக்கும் போட்டோவையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.

மேலும், கார்த்தி சிதம்பரம் பதிவு மூலம், பிரதமர் மோடி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் காட்சி திட்டமிட்டு படமாக்கப்பட்டது என்று பேசுவதற்கு காரணமானது. கார்த்தி சிதம்பரத்தின் இந்த டுவிட்டர் பதிவை பலரும் மறு டுவிட் செய்துள்ளனர்.

இந்த நிலையில் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் ஒரு ஆங்கில செய்தி இணையதளம், கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ள படக்குழுவினரின் புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இதனால், கார்த்தி சிதம்பரம் தவறான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்று பலரும் விமர்சிக்கையில், கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னுடைய ட்வீட்டை ஆங்கில செய்தி இணையதளம் எடுத்துக்கொண்டதில் மகிழ்சியடைகிறேன். நான் என்னுடைய புகைப்பட தேர்வுகளில் ஒரு புகைப்படம் தவறானது. ஆனால், நான் இந்த புகைப்படங்கள் தொடர்புடையவை என்று நான் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரை செய்யவில்லை. ஆனால், அது வெளிப்படையான அனுமானம். ஆனால், எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று என்னிடம் சொல்லப்படாத விஷயங்கள் இருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது” என்று டுவிட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி கடற்கரையில் நடைபயிற்சியின் போது பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள், விவாதங்கள், சர்ச்சைகள் இதன்மூலம், ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

Bjp Narendra Modi All India Congress Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment