Advertisment

தூத்துக்குடி மக்களை மனதின் குரலில் மனதார பாராட்டிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசியபோது, இயற்கையைப் பாதுக்காக்கும் தூத்துக்குடி மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
PM Modi praises people of Tuticorin district, pm modi praises tuticorin people for saving nature, pm modi maan ki baat speech, தூத்துக்குடி மக்களை பாராட்டிய பிரதமர் மோடி, பிரதமர் மோடி, மனதின் குரல், இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள், பனைமரம் நடும் தூத்துக்குடி மக்கள், மான் கி பாத், pm modi maan ki baat, tuticorin, nature saves, palm tree plantation by tuticorin people

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 83வது எபிசோடில் ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்தார். மேலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நோய் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது நம்முடைய பொறுப்பு” என்று கூறினார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட கொடிய 'ஓமிக்ரான்' திரிபு வைரஸ், உலகம் போராடும் நேரத்தில் பிரதமரின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. வைரஸின் புதிய மாறுபாட்டின் தாக்கம் மற்றும் தணிப்பு உத்திகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 1971ம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி அடைந்த 50 வது ஆண்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என்று பிரதமர் மோடி, ஆயுதப்படைகளுக்கு அஞ்சலி செலுத்தி தனது பேச்சைத் தொடங்கினார். “இரண்டு நாட்களில் டிசம்பர் மாதம் ஆரம்பமாகிறது. நாடு கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி நாள் கொண்டாடுகிறது. டிசம்பர் 16ம் தேதி, நாடு 1971 போரின் பொன்விழா ஆண்டையும் கொண்டாடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில், நமது ஆயுதப் படைகள், நமது வீரர்களை நான் நினைவுகூர விரும்புகிறேன். குறிப்பாக, இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை நினைவுகூர விரும்புகிறேன்” என்று பிரதமர் கூறினார்.

பல ஆண்டுகளாக அரசின் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பிரதமர் மோடி பாராட்டினார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சைகளைப் பெற்ற இரண்டு பயனாளிகளிடம் பேசினார்.

அம்பேத்கரின் நினைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி வருவதால் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

“பாபாசாகேப் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணித்தவர். நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வு நம் அனைவரிடமிருந்தும் நமது கடமைகளை நிறைவேற்றுவதை எதிர்பார்க்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, தனது வானொலி நிகழ்ச்சியின் முந்தைய எபிசோட்களில் அவர் பாதுகாப்பு விவகாரங்களைத் தொடர்ந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார். “நாம் அதன் சமநிலையை சீர்குலைக்கும்போது அல்லது அதன் தூய்மையை அழிக்கும்போது மட்டுமே இயற்கையால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம். இயற்கை ஒரு தாயைப் போல நம்மைப் பின்தொடர்கிறது, மேலும் நம் உலகத்தை புதிய வண்ணங்களால் நிரப்புகிறது.” என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம். அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தூத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், தீவுத்திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள் எனவும் கூறினார். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்துக்கு பனைமரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எனவே, பனை மரங்களை நடுவது பாராட்டத்தக்கது என்று கூறினார்.

நாடெங்கிலும் உள்ள சமூகங்கள் தங்கள் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் தீவிரமாகப் பணியாற்றிய நிகழ்வுகளை எடுத்துரைத்த பிரதமர், இயற்கையோடு இயைந்து வாழ்வதையும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும் ஊக்குவிக்கும் வாழ்க்கை முறைகளை மக்கள் பின்பற்றுவது அவசியம் என்றார்.

ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “இது ஸ்டார்ட்அப்களின் சகாப்தம், இன்று ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்பது உண்மை. ஆண்டுதோறும் ஸ்டார்ட் அப்கள் சாதனை முதலீடுகளைப் பெறுகின்றன. இந்தத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் சிறிய நகரங்களில்கூட ஸ்டார்ட் அப்களின் வரவு அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் ‘யூனிகார்ன்’ என்ற வார்த்தை மிகவும் விவாதிக்கப்படுகிறது.” என்று கூறினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உள்ள மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். “நேபாளம், மொரிஷியஸ், தான்சானியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்று, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் இந்தியாவின் வரலாற்றை மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையில் வெளிப்படுத்திய அழகான கவிதைகள் மூலம் டெல்லி சமீபத்தில் குழந்தைகளுடன் கொண்டாடியது” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஜான்சி போன்ற இடங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, “ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரி பாய் போன்ற வீராங்கனைகளும் இங்கே இருந்துள்ளனர். மேஜர் தியான் சந்த் போன்ற கேல் ரத்னாவையும் இந்தப் பகுதி நாட்டுக்கு வழங்கியிருக்கிறது” என்று கூறினார்.

அக்டோபர் 24ம் தேதி ஒலிபரப்பப்பட்ட மன் கி பாத் நிகழ்ச்சியின் முந்தைய எபிசோடில், இந்தியா 100 கோடி தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையைத் தாண்டியதைப் பாராட்டிய பிரதமர் மோடி, எந்தவொரு திட்டத்தின் வெற்றியையும் அனைவரின் முயற்சியால்தான் அடைய முடியும் என்பதை இந்த சாதனை காட்டுகிறது என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Tuticorin Maan Ki Baat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment