Advertisment

"22ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - பிரதமர் மோடி உரை

PM Modi address to the Nation on Corona Virus : கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"22ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - பிரதமர் மோடி உரை

சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 236 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Live Blog



























Highlights

    20:40 (IST)19 Mar 2020

    பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம்

    "பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம். எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்" - பிரதமர் மோடி

    20:30 (IST)19 Mar 2020

    சம்பளத்தை குறைக்க வேண்டாம்

    கொரோனாவால் பணிக்கு வர முடியாத ஊழியரின் சம்பளத்தை நிறுவனங்கள் குறைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

    20:29 (IST)19 Mar 2020

    கூட்டமாக கூடுவதை தவிர்த்திட வேண்டும்

    மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வைரஸ் பரவலை தடுத்திட வேண்டும். வீட்டிலேயே இருப்பதன் மூலம் பரவலை வெகுவாக தடுக்க முடியும். கூட்டமாக கூடுவதை தவிர்த்திட வேண்டும்- மோடி

    20:27 (IST)19 Mar 2020

    மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்- மோடி

    முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும். இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது. தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்- மோடி

    20:25 (IST)19 Mar 2020

    மாலை 5 மணிக்கு வாசலில் நின்று நன்றி கூறுங்கள்

    வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்று அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி செலுத்த வேண்டும். பணிபுரியும் மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும் - பிரதமர் மோடி

    20:22 (IST)19 Mar 2020

    இதுவே நம் தாரக மந்திரம்

    மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் - இதுவே நம் தாரக மந்திரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    20:21 (IST)19 Mar 2020

    மக்களுக்காக மக்களே பிறப்பித்துக் கொள்ளும் ஊரடங்கு உத்தரவு

    வரும் 22ம் தேதி மக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இது மக்களுக்காக மக்களே பிறப்பித்துக் கொள்ளும் ஊரடங்கு உத்தரவு. அத்தியாவசியத் தேவைகளில் பணிபுரிவோர் தவிர, வேறு எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

    20:19 (IST)19 Mar 2020

    22ம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்

    வரும் மார்ச் 22ம் தேதியன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - மோடி

    20:17 (IST)19 Mar 2020

    இந்தியா இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது

    திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது, மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது. 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது - மோடி

    20:12 (IST)19 Mar 2020

    கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை - மோடி

    தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது - மோடி

    20:08 (IST)19 Mar 2020

    மிக மன தைரியத்துடன்....

    இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது. வரும் சில வாரங்களில் அரசுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - மோடி

    20:06 (IST)19 Mar 2020

    உலகப் போர்களை விட மோசமானது கொரோனா

    கொரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. உலகப் போர்களை விட மோசமானது கொரோனா - பிரதமர் மோடி

    20:03 (IST)19 Mar 2020

    உரையை தொடங்கினார் பிரதமர்

    நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியுள்ளார். 

    19:49 (IST)19 Mar 2020

    அனைத்து மாநில முதல்வர்களிடம் பேசும் பிரதமர் மோடி

    நாளை (மார்ச்.20) மாலை 4 மணிக்கு, கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸிங் வாயிலாக பிரதமர் மோடி பேசுகிறார். 

    19:37 (IST)19 Mar 2020

    டெல்லியில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை

    டெல்லியில் இதுவரை 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    டெல்லியில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உணவகங்களை மூட உத்தரவிடப்படுகிறது. வீடுகளுக்கு சென்று உணவுகளை வழங்கும் 'ஹோம் டெலிவரி' முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பஸ் டிப்போக்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும்.

    19:10 (IST)19 Mar 2020

    ரயிலில் தப்பித்த கொரோனா பாதிப்பு நபர்

    அசாமின் மோரிகாவன் நகரில் வசித்து வந்த 24 வயது வாலிபர் கேரளாவில் இருந்தபொழுது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவரை கேரளாவில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், கேரள மருத்துவமனையில் இருந்து தப்பிய அந்த நபரை, போங்காய்காவன் ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலின் பொது பெட்டியில் வைத்து அவரை கைது செய்தனர். பின்பு உடனடியாக ரெயிலில் இருந்து கீழே இறக்கி பரிசோதனை செய்தனர்.

    அவரை போங்காய்காவன் பகுதியில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த வாலிபருடன் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், வீட்டில் தனியாக கண்காணிப்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    19:06 (IST)19 Mar 2020

    போதுமான அளவில் முகக் கவசம்?

    மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

    இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும்.

    கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தல் அவசியம். தனியார் துறையினர் இயன்றவரை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுரை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மார்ச் 22-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்படுகிறது. தேவையற்ற ரெயில் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் ரெயில்களில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படுகிறது.

    ரெயில், விமானங்களில் மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே கட்டணச் சலுகை நீடிக்கும். அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 53 வகையான கட்டணச் சலுகைகளில் வெறும் 15 மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. என்-95 முகக்கவசம் நாட்டில் போதுமான அளவில் கிடைக்கின்றன.

    19:05 (IST)19 Mar 2020

    PM Modi on Corona Virus Live

    இந்தியாவில் வருகிற மார்ச் 22 முதல் வெளிநாட்டு விமானங்கள் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அவசர / அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களைத் தவிர தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலையைச் செய்ய வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கோரி உள்ளது.

    Corona Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment