Advertisment

கொரோனா தடுப்பூசி வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

Corona Vaccine Wastage : ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே நமது கடமை. மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கள தளபதிகள்

author-image
WebDesk
New Update
கொரோனா தடுப்பூசி வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி வீணாகாமல் பாதுகாக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை அதிகாரிகளுடனாக ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளை வலியுறுத்தினார், "ஒரு டோஸ் கூட கழிவுகள் கூட பாதுகாப்புக் கவசத்தை மறுக்கிறது"

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று பாதிப்பக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முதலில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகரிகளுடன் இன்று வீடியோ கானப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கூறுகையில், “தடுப்பூசி வீணடிக்கப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்போது, ​​அவை வீணாகாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தடுப்பூசி வீணடிக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதிகாரிகள் தங்களது பகுதியில் தடுப்பூச வீணடிக்கப்படவில்லை என்பதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.  தடுப்பூசி வீணடிப்பதை தடுப்பது மிக முக்கியமானது,

கண்ணுக்கு தெரியாக கொரோனா தடுப்பூசி, மாறுபடும் வகையை சார்ந்தது. எனவே, வைரஸ் தொற்றுக்கு தகுந்தார்போல், உங்களின் அணுகுமுறை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். கொரோனா வைரஸ் உங்கள் வேலையை சவாலாக மாற்றியுள்ளது. புதிய சவால்களுக்கு மத்தியில், புதிய யுக்திகளுடன் தீர்வு கான்பது அவசியம். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பயன்படுத்துவது முக்கியம், நாம் அனைவரும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ”என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்த கவலை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இளைஞர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தயாராக இருக்க வேண்டும். மேலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று  குறைந்துவிட்ட நிலையில் நாம்இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போரில், "ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே நமது கடமை. மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கள தளபதிகள், வைரஸுக்கு எதிராக உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்கள், ஆக்கிரமிப்பு சோதனை மற்றும் மக்கள் சரியான மற்றும் முழுமையான தகவல்களை வைத்திருப்பதை உறுதி செய்தல் போன்ற பணிகளை கன்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment