கோர விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்

ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர் வழியாக பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், இனோவா காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சரக்குந்து ஒன்றில் அவரது கார் மோதியது. இந்த விபத்தில், யசோதா பெண் காயங்களுடன் உயிர் பிழைத்தார். மேலும், காரிலிருந்த 7 பேரில் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். மேலும், 5 வயது குழந்தை உட்பட 3 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

ராஜஸ்தானில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு குஜராத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், அவருடைய கார் முற்றிலும் சுக்குநூறாக நொறுங்கியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close