Advertisment

பிரதமர் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ : பாஜக கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi Hug Highlights, BJP condemns

PM Narendra Modi Hug Highlights, BJP condemns

பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போதும் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது இந்த நடவடிக்கையை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘பிரதமர் மோடியின் கட்டித் தழுவல் ஹைலைட்ஸ்’ என தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், வெளிநாட்டுத் தலைவர்களை அவர் கட்டித் தழுவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இடையே, ‘மோடி இஸ் ஆக்வர்ட், குறிப்பாக வெளிநாட்டுத் தலைவர்களை கட்டித் தழுவும்போது இன்னும் மோசமாக நடந்து கொள்கிறார்’ என்கிற வாசகம் இடம் பெறுகிறது.

‘ஹாலந்து முன்னாள் அதிபருடன் டைட்டானிக் கட்டித் தழுவல்’ என குறிப்பிட்டு, டைட்டானிக் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் கட்டித் தழுவும் காட்சியையும் காட்டுவது ரசனைக் குறைவான அம்சமாக உள்ளது. இஸ்ரேல் பிரதமர் இந்தியா வரும்போதும் இதேபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

ஓரிரு பெண் தலைவர்களை மோடி கட்டித் தழுவி வரவேற்கும் காட்சிகளை வெளியிட்டு, ‘லெட் மீ லவ்’ என வாசகங்களை வெளியிட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ‘நீச்’ என குறிப்பிட்டதற்கு மணி சங்கர் ஐயர் மீது நடவடிக்கை எடுத்த ராகுல் காந்திக்கு தெரிந்துதான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பிரதமர் மோடியை இப்படி அநாகரீகமாக கேலி செய்திருப்பதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பிரபலமான உலக தலைவர்களில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதை பாராட்ட மனமில்லாத காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பக்குவமின்மை வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிறது’ என கூறியிருக்கிறார் அவர். ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment