Advertisment

இந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது - பிரதமர் மோடி உரை

கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி சீனத் துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதலில் தங்கள் வீரத்தைக் காட்டி இறந்த 20 இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார். பின்னர், இந்தியா தனது பிரதேசத்தின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது - பிரதமர் மோடி உரை

கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி சீனத் துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதலில் தங்கள் வீரத்தைக் காட்டி இறந்த 20 இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார். பின்னர், இந்தியா தனது பிரதேசத்தின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Advertisment

பிரதமர் மோடி மாதந்தோறும் உரையாற்றும் வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், “லடாக்கில் இந்திய மண்ணின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா நட்பு உணர்வை மதிக்கிறது… எந்த விரோதிக்கும் வெட்கப்படாமல் தகுந்த பதிலை அளிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு. நம்முடைய துணிச்சலான வீரர்கள் அன்னை இந்தியாவின் மகிமை மற்றும் மரியாதை குறித்து யாரையும் ஒரு கண் வைக்க விடமாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.” என்று கூறினார்.

மேலும், லடாக்கில் உயிர்த் தியாகம் செய்த நம்முடைய வீரர்களின் துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்துவதில் முழு நாடும் ஒன்று சேர்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் அவர்களை பயபக்தியுடன், நன்றியுடன் வணங்குகிறது” என்று கூறினார்.

பிரதமர் மோடி தன்னுடைய உரையில், “அவர்களது குடும்ப உறுப்பினர்களைப் போலவே, ஒவ்வொரு இந்தியரும் இந்த இழப்புக்கு வேதனையுடன் வருந்துகிறார்கள். படையினர் செய்த தியாகத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்த பெருமை தேசபக்தி ஆகியவை நாட்டின் பலமாக உள்ளது” என்று கூறினார்.

இந்தியா சீனா எல்லையில் நிலைமை குறித்து விவாதிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின்னர், உயர் மட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இந்திய எல்லைக்குள் ஊடுருவல் இல்லை என்றும் யாரும் ராணுவ நிலைகளை கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோதல்களில் கொல்லப்பட்ட பீகாரைச் சேர்ந்த குந்தன்குமார் என்ற ராணுவ வீரரின் தந்தை, “நாட்டைக் காக்க தனது பேரன்களைக்கூட ராணுவத்திற்கு அனுப்புவேன்” என்று தெரிவித்த கருத்துக்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்த சக்தி அனைத்து தியாகிகள் குடும்பங்களிலும் பரவுகிறது. உண்மையிலேயே, இந்த குடும்ப உறுப்பினர்கள் காட்டிய தியாக உணர்வு வணக்கத்திற்குரியது. அன்னை இந்தியாவின் பாதுகாப்பிற்காக நமது வீரர்கள் மிக உயர்ந்த தியாகத்தை செய்துள்ளனர். அதுவே நம் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், அது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கான தீவிரமான உந்துதல் நாட்டை தன்னம்பிக்கை பெறச் செய்யும் அதுவே ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலி என்று பிரதமர் மோடி கூறினார்.

நம்முடைய விருப்பங்கள் மற்றும் முயற்சிகள் ஒரே திசையில் இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, நாம் நாட்டின் திறன்களை மேம்படுத்துவதற்கும், நம்முடைய எல்லைகளை பாதுகாப்பதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.

தன்னம்பிக்கை இந்தியா என்பது உண்மையான, ஆழ்ந்த அர்த்தத்தில் நம்முடைய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியாவின் முழுமையான தீர்மானம் அதன் மரியாதை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதாகும். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பது ஆகும். இந்தியாவின் பாரம்பரியம் - நம்பிக்கை, நட்பு. இந்தியாவின் சக்தி சகோதரத்துவம்” என்று கூறினார்.

பாதுகாப்புத் துறை பற்றி பேசிய பிரதமர்ம் மோடி, “சுதந்திரத்திற்கு முன்னர் உலகின் பல நாடுகளை விட நம் நாடு முன்னிலையில் இருந்தது. ஏனெனில் ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தன. அப்போது இந்தியாவை விட பின்தங்கி இருந்த பல நாடுகள், இப்போது நமக்கு முன்னால் உள்ளன” என்றார்.

இருப்பினும், மே மாத தொடக்கத்தில் தொடங்கிய சீனாவுடனான முரண்பாடு குறித்து பேசிய பிரதமர் மோடி, கிழக்கு லடாக்கில் சீனா அவர்களுடைய ஆழமான பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ கட்டமைப்பை மேற்கொண்டுள்ளது. அதே போல, அது இந்தியாவிலும் பொருந்தும்.

கர்னல் பி சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய துருப்புக்கள் சரியான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இந்தியாவுக்கு பக்கத்தில் சீனா அமைத்திருந்த ஒரு கண்காணிப்பு இடத்திலிருந்து கூடாரங்களை அகற்றச் சென்றதை அடுத்து ஜூன் 15ம் தேதி மோதல்கள் நடந்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Narendra Modi China Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment