வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி; பிரதமர் மோடி

“நம்முடைய அரசியலுக்கு இளைஞர்கள் தேவை. இது நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கான ஆக்கப்பூர்வமான ஊடகம். வாரிசு அரசியலின் விஷம் இளைஞர்கள் நுழையாவிட்டால் ஜனநாயகத்தை தொடர்ந்து பலவீனப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி, அதை வேரோடு களைய வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கூறினார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற பிரிவு உபசார விழாவில் பேசிய பிரதமர் மோடி, “ஒருபோதும் இது வாரிசு அரசியலுக்கான முதல் நாடு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை இந்த நாடு நானும் எனது குடும்பத்தினரைப் பற்றியதுதான். மக்கள் இப்போது நேர்மையான நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். ஆனால், வாரிசு அரசியலின் நோய் முழுமையாக முடிவடையவில்லை” என்று கூறினார்.

இளைஞர்களை அரசியலில் சேர ஊக்குவித்த பிரதமர் மோடி, “நம்முடைய அரசியலுக்கு இளைஞர்கள் தேவை. நேர்மறையான மாற்றங்களைச் செய்ய இது ஒரு ஆக்கபூர்வமான ஊடகம். இளைஞர்கள் நுழையாவிட்டால் வாரிசு அரசியலின் விஷம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்.” என்று கூறினார்.

“அரசியலில் குடும்பப் பெயர்களின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் அதிர்ஷ்டம் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், அரசியலில், வாரிசு அரசிய, நோய் முழுமையாக முடிவடையவ்வில்லை. தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் இன்னும் அரசியலில் உள்ளனர்” என்று அவர் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகளை வெளிப்படையாக தாக்கினார். வாரிசு அரசியலைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருபோதும் இது முதல் நாடு அல்ல. இது அவர்களுக்கு நானும் எனது குடும்பமும்தான் எல்லாம்” என்று அவர் கூறினார்.

எல்லாவற்றையும் மாற்ற முடியும், ஆனால் அரசியலை மாற்ற முடியாது என்று மக்கள் வழக்கமாகக் கூறுவதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இன்று நாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள், அவர்கள் நேர்மையான மக்களுடன் நின்று அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறார்கள். அரசியலில் நேர்மையுடன் வருபவர்களுடனும், மக்கள் நலனுக்காக உறுதியுடன் இருப்பவர்களுடன் மக்கள் உறுதியாக நிற்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பிரதமர் முன் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதல் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா 2019 ஜனவரி 12 முதல் 27 வரை ‘புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைக்கு பங்களிப்பு செய்யுங்கள்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm narendra modi says political dynasty biggest enemy of democracy

Next Story
உச்சநீதிமன்றத்திற்கு நன்றி… ஆனால் குழுவை ஏற்க முடியாது : விவசாயிகள் திட்டவட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com