ஆன்லைனில் ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்!

தேசிய தகவல் மையம் வடிவமைத்த ஆன்லைன் போர்ட்டலில் இந்த ஏலம் நடைபெறும். அனைவரும் பங்கு கொள்ளும் வகையில், செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 3 வரை...

PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மொத்தம் 2,772 பரிசுகள் செப்டம்பர் 14 முதல் ஆன்லைனில் ஏலத்திற்கு விடப்படும். இதில் கிடைக்கும் நிதியை ’நமாமி கங்கே’ திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கலாச்சார அமைச்சர் பிரகலாத் படேல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

 PM Narendra Modi Namami Gange project

தற்போது டெல்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பரிசுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள. இதில் பல்வேறு தலைவர்கள் மற்றும் அமைப்புகள் பரிசளித்த ஹெட் கியர்கள், சால்வைகள், உருவப்படங்கள் போன்றவை அடங்கும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரவீன் கண்ணா)

PM Narendra Modi Namami Gange project

தேசிய தகவல் மையம் வடிவமைத்த ஆன்லைன் போர்ட்டலில் இந்த ஏலம் நடைபெறும். அனைவரும் பங்கு கொள்ளும் வகையில், செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 3 வரை இந்த ஏலம் நடைபெறும்.

PM Narendra Modi Namami Gange project

ரூ .2.5 லட்சம் அடிப்படை விலையில், பட்டினால் செய்யப்பட்ட மோடியின் உருவப்படத்தை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார், சீமட்டி ஜவுளி உரிமையாளர் பீனா கண்ணன். பரிசளிக்கப்பட்ட பொருட்களிலேயே இது தான் விலையுயர்ந்த பொருளாக கருதப் படுகிறது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரவீன் கண்ணா)

PM Narendra Modi Namami Gange project

ஏலம் விடப்படும் பொருட்களின் அடிப்படை விலை ரூ .200 முதல் ரூ 2.5 லட்சம் வரை இருக்கும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரவீன் கண்ணா)

PM Narendra Modi Namami Gange project

என்.ஜி.எம்.ஏ காட்சிப்படுத்தப்படும் ஏலத்திற்கான பொருட்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் மாற்றப்படும் என்று பிரகலாத் படேல் கூறியுள்ளார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரவீன் கண்ணா)

PM Narendra Modi Namami Gange project

பிரதமரால் பெறப்பட்ட 1,800 க்கும் மேற்பட்ட பரிசுகள் கடந்த ஜனவரியில் ஏலம் விடப்பட்டது. பதினைந்து நாட்கள் நீடித்த இந்த ஏலத்தில் சுமார் 4,000 ஏலதாரர்கள் பங்கேற்றனர். இதில் கிடைத்த நிதி ’நமாமி கங்கே’ திட்டத்திற்குக் கொடுக்கப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரவீன் கண்ணா)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close