Advertisment

மன் கி பாத்தில் நாட்டு நாய்கள் பற்றி பேசிய மோடி.. 8 லட்சம் "டிஸ்லைக்" வாங்கிய வீடியோ!

வரப்போக இருக்கும் நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் குறித்து பெற்றோர்களும், குழந்தைகளும் அச்சத்தில் இருக்க மோடி இப்படியா பேசுவது என்று எதிர்மறை கருத்துகள் பலவும் பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi’s 'Mann Ki Baat' video gets over 5 lakh dislikes on YouTube

PM Narendra Modi’s 'Mann Ki Baat' video gets over 5 lakh dislikes on YouTube :  ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 68வது மன் கி பாத் உரையில், நாட்டு நாய்கள் வளர்ப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். இதனை பராமரிக்க மிகவும் குறைவான செலவு மட்டுமே ஏற்படும் என்றும், நம் நாட்டின் சூழலுக்கு தகுந்தவாறு நாய்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : பத்து ரூவாய்க்கு நாலு இட்லி ; சேலத்தில் ஃபேமஸாகும் மோடி இட்லி!

இதனை தொடர்ந்து #Mann_Ki_Nahi_Students_Ki_Baat என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக துவங்கியது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினார்கள். மோடி இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இது குறித்து பேசவில்லை.

இந்நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அதிக டிஸ்லைக்குகளை வாங்கிய வீடியோவாக இந்த வீடியோ மாறியுள்ளது. அதுவும் வெறும் ஒரே நாளில். 8 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோவை டிஸ்லைக் செய்துள்ளனர்.  39 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ய 8 லட்சம் நபர்கள் டிஸ்லைக் செய்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 55 ஆயிரம் நபர்கள் தங்கள் கருத்துகளை அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அதே உரையில், வராக நதிக்கரையோரம் வசிக்கும் எட்டிகொப்பலா (Etikoppala) கலைஞர்கள் உருவாக்கும் எட்டிகொப்பாக்கா பொம்மைகள் குறித்தும், 2017ம் ஆண்டு அதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது குறித்தும் அவர் பேசினார்.

மேலும் படிக்க : அப்போது மயில்…. தற்போது மழை… சில்லென இருக்கும் மோடியின் ட்விட்டர் பக்கம்!

Modi Mann Ki Baat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment