Advertisment

மோடி பாதுகாப்பு மீறல்: தலையிட வேண்டாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எச்சரிக்கை

1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய படுகொலைகளில் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்க இயலவில்லை என்ற அடிப்படையில் வேண்டுமானால் பாதுகாப்பு மீறல் குறித்த விசாரணையை நடத்தாலாம் என்றும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
PM security breach

PM security breach : பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்கள் தொடர்பான மனுவை திங்கள் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பஞ்சாபில் நடைபெற்ற நிகழ்வுக்கு பொறுப்பேற்று இந்தியாவிற்கு வெளியே இருந்து, முன்பே பதிவு செய்யப்பட்ட செய்திகளை சில வழக்கறிஞர்கள் அழைப்புகள் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அரசுக்கு உதவும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கையையும் அந்த செய்திகள் உள்ளடக்கியுள்ளது. இது தொடர்பாக திங்கள் கிழமை காலை 10.40 மணிக்கும் மற்றும் மதியம் 12.36 மணிக்கும் தங்களுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Advertisment

பிரதமர் மோடி பாதுகாப்பு சர்ச்சை: சர்தார் பட்டேல் வாசகத்தை வைத்து பஞ்சாப் முதல்வர் பதிலடி

உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்ட்ராவிற்கான முன்னாள் வழக்கறிஞர் நிஷாந்த் கத்னேஸ்வர்கர், இந்த அழைப்புகள் இங்கிலாந்தில் இருந்து வந்ததாக காட்டியது என்று கூறினார். திங்கள் கிழமை அன்று இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் (SCAORA) உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியது.

கடந்த ஐந்தாம் தேதி அன்று பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மீறல்கள் நடைபெற்றதற்கு பொறுப்பேற்று ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட, ஆட்டோமேட்டட் கால்களை சில வழக்கறிஞர்கள் பெற்றுள்ளனர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) என்ற சீக்கிய அமைப்பு தான் இந்த பாதுகாப்பு விதிமுறை மீறல்களுக்கு காரணம் என்று பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்கக் கோரி, வழக்கறிஞர்கள் குரல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் விலகி இருக்க வேண்டும் என்றும் அந்த அழைப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய படுகொலைகளில் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்க இயலவில்லை என்ற அடிப்படையில் வேண்டுமானால் பாதுகாப்பு மீறல் குறித்த விசாரணையை நடத்தாலாம் என்றும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமரின் பாதுகாப்பு மீறல்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய SCAORA இது பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் (Advocates on Record) தனி உரிமைகளை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது. "அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்கள் பொது களத்தில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வாதிடும் வழக்குகள் தொடர்பான முக்கியமான ரகசிய தகவல்கள் அனைத்தும் அதில் உள்ளது. வங்கி தொடர்பான தகவல்களும் அந்த மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், போன்கள் ஹேக் செய்யப்பட்டால் பல முக்கியமான தரவுகளை தவறாக பயன்படுத்தும் அபாயமும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரான தீபக் ப்ரகாஷ் இது தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையரிடம் குற்றவியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் கடிதத்தில், அழைப்பு விடுத்தவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த குழு ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். மேலும் அவர்களின் எண்கள் “ட்ரேஸ்” செய்ய இயலாததாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை முதலே இது போன்ற எச்சரிக்கை அழைப்புகளை அனைத்து வழக்கறிஞர்களும் பெற்று வருகின்றனர் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் பாதுகாப்பு மீறல் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் பட்சத்தில் அரசாங்கத்தையும் பொது அமைதியையும் சீர்குலைக்க அவர்கள் விரோதபோக்கை பயன்படுத்த இருப்பதையே இது குறிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment