Advertisment

அமெரிக்க அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி : இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து பேச்சு

PM Modi Speaks to Amperica President : அமெரிக்க அதிபரான ஜோ பிடன் பதவியேற்ற பின் முதல்முறையாக இந்திய பிரதமர் மோடி அவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அமெரிக்க அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி : இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து பேச்சு

PM Modi Speaks to Amperica President : அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பிரதமர் மோடி நேற்று (திங்கள் கிழமை) அமெரிக்க ஜோபைடனுடன் தொலைபேசியில், உரையாடியுள்ளார். இந்த உரையாடலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு வெளியிலும், அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான நட்புறவை ஏற்பட்டுத்தும் விதமாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனக் கடல் முதல் இந்தியா-சீனா எல்லை வரை சீனாவின் ஆதிக்கம் செலுத்தி வருவது தொடர்பாக பேசியதாகவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோ பிடன் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம்.  நானும் அமெரிக்க ஜனாதிபதியும், ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நட்புறவிற்கு உறுதியாக இருக்கிறோம். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு வெளியிலும், அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கும் கூட்டாட்சியை பலப்படுத்த நாங்கள் தயாராக இருக்கியோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில், என்எஸ்ஏ அஜித் டோவல் தனது  அமெரிக்க என்எஸ்ஏ ஜேக் சல்லிவனுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் பேசியுள்ளார்; பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதற்கு முன் கடந்த நவம்பரில், மோடி – பிடன் இருவரும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மைக்கு, இருநாட்டு தலைவர்களும், தலைவர்கள் நெருக்கமாக பணியாற்ற என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று தொற்றுநோய் பரவல் மற்றும், குறைந்த விலையில் தடுப்பூசிகளை தயாரிக்க ஊக்குவிப்பது,  காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவகாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தோ-பசிபிக் மற்றும் கொரோனா தொற்று நோய் என்ற இரண்டு பிரச்சினைக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் தற்போதுள்ள ஜோ பிடன் நிர்வாகத்திற்கும் இரண்டு பகுதிகளாக இருந்தாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் முன்னுரிமை இல்லாத காலநிலை மாற்றம் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. ஒபாமா நிர்வாகம் காலநிலை மாற்றத்திற்கு அதிக முன்னுரிமை அளித்திருந்தது, மேலும் கோபன்ஹேகன் (2009) மற்றும் பாரிஸ் (2015) ஆகியவற்றில் நடந்த காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா இந்தியாவை அணுகியது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment