Advertisment

விருப்ப உறவுக்கான வயது வரம்பு, வயது வித்தியாசத்தில் மாற்றம் சரியா? வழக்கறிஞர்களின் கருத்துகள் என்ன ?

16 வயதிற்கு மேற்பட்டவர்களில் விருப்ப உறவானது பாலியல் குற்றம் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
POCSO Act Changes, Madras High Court, Age of Consensual Sex, Age Gap of Consensual Sex

POCSO Act Changes : Age of consent : போக்சோ சட்டம் என்பது குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தாக்குதல்கள், வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு தண்டனையை உறுதி செய்யும் சட்டமாகும்.

Advertisment

POCSO Act Changes : வயது வரம்பில் மாற்றம்

18ற்கு குறைவாக இருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும். ஆனால் 26ம் தேதி போக்சோ சட்டத்தில் மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் சிறுவர்கள்/சிறுமியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களுக்கான வயது வரம்பினை 18 வயதில் இருந்து 16 வயதாக குறைத்தும், 16 வயதிற்கு மேல் விருப்பப் பாலுறவு குற்றமாகாது என்றும் கூறியுள்ளார். அப்படி பாலுறவில் ஈடுபவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் குறித்த முக்கிய அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. போக்சோ சட்டம் தொடர்பாக நாமக்கலை சேர்ந்த சபரிநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கினை விசாரணை செய்தார் நீதிபதி பார்த்திபன். விசாரணையின் முடிவில் அவர் அறிவித்த மாற்றங்கள் என்னென்ன ?

போக்சோ சட்டம் என்றால் என்ன ? முழுமையான விபரங்களைப் படிக்க :

நீதிபதி பார்த்திபனின் தீர்ப்பு

போக்சோ சட்டம் பிரிவு 2(டி) யில் குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தியில், குழந்தைகளுக்கான வயதினை 18 வயதில் இருந்து 16 வயதாக குறைக்கப்பட வேண்டும்.

16 வயதிற்கு மேற்பட்டவர்களில் விருப்ப உறவானது பாலியல் குற்றம் இல்லை

16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களின் விருப்ப உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவே மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதிக வயது வித்தியாசத்தில் ஏற்படும் விருப்ப உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண்ணின் துணையாக இருப்பவர் அந்த பெண்ணை விட 5 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை, அவருடைய நம்பிக்கையை பயன்படுத்தியும், இந்த சட்டத்தினை காரணமாக வைத்தும், அதிக வயதுடைய ஆண் அவரிடம் தவறாக அணுகாமல் இருப்பதற்கு இந்த மாற்றம் முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயது வரம்பு மாற்றம் குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்துகள் என்ன ?

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா க்ரோவர் கூறுகையில், நம்முடைய நாடு, இந்த வயதில் (16-18) விருப்ப உறவு கொள்வதை தவறு என்று மறுத்துள்ளது. மேலும் குடும்ப சூழல், சாதிய கட்டுப்பாடு, ஆர்த்தோடக்ஸ் என்ற பெயரில் இளைய சமுதாயத்தை வதைப்பதோடு அவர்கள் மீது போலியான க்ரிமினல் வழக்குகளையும் இது வரை பதிவு செய்தனர். இந்த மாற்றத்தை வரவேற்கும் வகையில் அவர் பேசினார்.

குற்றவியல் வழக்கறிஞர் ரெபாக்கா ஜான் கூறுகையில், நாம் பல்வேறு காலக்கட்டங்களில் தொடர்ந்து, இந்த குறிப்பிட்ட வயதுக்குள் (16-18) நடக்கும் உறவுகள் குறித்தும், அது சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் நாம் அறிந்த வண்ணம் தான் இருக்கின்றோம். இப்படியான சூழலில் பெற்றவர்களிடம் அந்த குழந்தைகள் மாட்டிக் கொண்டால், பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், எளிதாக, அவளின் ஒப்புதல் இன்றி இந்த உறவு நடைபெற்றது என்று புகார் அளித்துவிடுகின்றனர்.

குழந்தைகள் நல சமூக செயற்பாட்டாளும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான ஆனந்த் குமார் அஸ்தானா கூறுகையில். ”2012ம் ஆண்டு விருப்ப உறவின் வயதினை 18 வயதாக மாற்றி அறிவிக்கப்பட்ட போது, எக்கச்சக்கமான இளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. விருப்ப உறவின் பெயரிலோ, காதலாலோ உறவில் ஈடுபட்டவர்கள் பலர் இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டு, புகார்களில் சிக்கினார்கள். நீதிமன்றங்கள் ஸ்தம்பித்து போகும் அளவிற்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, அரசாங்கம் நல்ல மாற்றத்தை தரலாம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

இந்த வயதில் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களை குற்றவாளிகளாக காண்பது முற்றிலும் தக்வறு என்கிறார், தேசிய குழந்தைகள் நல அமைப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா சின்ஹா. இந்த உறவில் ஈடுபடும் போது, அதற்கான சூழலையே நாம் ஆராய வேண்டுமே தவிர, மேலும் மேலும் குழந்தைகளிடம் அது தொடர்பான கேள்விகளை கேட்பது குற்றமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி சட்ட பல்கலைக் கழக பேராசிரியர் திருமதி. வேத குமாரி கூறுகையில், இந்த வயதில் விருப்ப உறவில் ஈடுபடுபவர்களை குற்றவாளிகளாக காண இயலாது என்றும், பாலியல் விருப்பங்களை நிறைவேற்றுவது இந்த வயதில் சாதாரணமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் ஆண் குழந்தைகளை காரணம் காட்டுவது ஏற்புடையது இல்லை.

குற்றவாளிகள் என்றால் இருவரும் குற்றவாளிகள் தான். நிரபராதிகள் என்றால் இருவரும் நிரபராதிகள் தான் என்றார். உறவில் ஈடுபட்ட பெண்ணை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்புகின்றார்கள். ஆணை சிறுவர் ஜெயிலுக்கு அனுப்புகின்றார்கள். இருவருமே கூட்டாளிகள் தான். அவர்களை எப்படி இரண்டு விதமாக நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர்.

வயது வித்தியாசம் தொடர்பாக அவர்களின் கருத்துகள் என்ன ?

வழக்கறிஞர் விருந்தா க்ரோவர் கூறுகையில், இந்த வயது வித்தியாசத்தை நான் வரவேற்கின்றேன். 4 முதல் 5 வயது வரை வித்தியாசம் என்பது சரி தான். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கான சட்டத்தை ரோமியோ ஜூலியட் சட்டம் என்கிறார்கள்.

ரெபாக்கா கூறுகையில், இந்தியாவில் இருக்கும் தந்தை வழிச் சமூக பழக்க வழக்கங்களைப் போல இருக்கிறது இந்த வயது வித்தியாசம் என்றும், ஒரு வயதானவர், ஒரு சிறிய பெண்ணை தன்னுடைய இச்சைக்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்றால் நிச்சயம் அது தவறு தான். ஆனால் அதிக வயது வித்தியாசத்தில் காதலிக்கும் இருவரை குற்றவாளிகள் சூழலுக்குள் தள்ள விருப்பம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

குமாரி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு ஒருவர் மீது க்ரஷ் ஏற்படுவது இன்றைய சூழலில் மிகவும் சாதாரணமான ஒன்று. அதனை பயன்படுத்தி அவளை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு எதிராக இந்த சட்டம் அப்பெண்ணை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான முழுமையான  ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க

Pocso Act Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment