Advertisment

கங்கையில் மிதந்த பிணங்கள் பற்றி எழுதுபவர்கள் “இலக்கிய நக்சல்கள்”... சர்ச்சையை கிளப்பிய சாகித்ய அகாதமி தலையங்கம்

மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரானவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். காக்கர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது இல்லை. ஆனால் இது கவிதையும் இல்லை. சில பகுதிகள் சமூகத்தின் துண்டாடலுக்கு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
கங்கையில் மிதந்த பிணங்கள் பற்றி எழுதுபவர்கள் “இலக்கிய நக்சல்கள்”... சர்ச்சையை கிளப்பிய சாகித்ய அகாதமி தலையங்கம்

 Ritu Sharma 

Advertisment

குஜராத் சாகித்ய அகாதமியின் அதிகாரப்பூர்வ பதிப்பான சப்தஷ்ருஷ்தி (Shabdashrushti), கங்கையில் மிதக்கும் பிணங்கள் குறித்து குஜராத்தி கவிஞர் பருல் காக்கர் எழுதிய கவிதைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. உ.பி. மற்றும் பீகாரில் கங்கையில் மிதந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் குறித்து எழுதப்பட்ட கவிதையை அராஜகம் என்று குறிப்பிட்டதோடு, இந்த கவிதையை பரப்பியவர்களை இலக்கிய நக்சல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அகாதமியின் சேர்மன் விஷ்ணு பாண்டியா, இந்த தலையங்க விமர்சனம் குறித்து ஒப்புக் கொண்டார் ஆனால் அதில் ஷவ் வஹினி கங்கா கவிதை குறித்து மேற்கோள் காட்டவில்லை இருப்பினும் அந்த கவிதையை சுட்டியே விமர்சனம் எழுதியாக கூறியுள்ளார். இந்த கவிதை சமீபத்தில் அதிகம் நபரால் பாராட்டப்பட்ட, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றாகும்.

”கிளர்ச்சி நிலையில் வெளிப்படுத்திய அர்த்தமற்ற கோபம்" என்று விவரித்த தலையங்கத்தில், இந்த வார்த்தைகள் மத்திய அரசுக்கு எதிரான, மத்திய அரசின் சேதியவாத கொள்கைகளுக்கு எதிரான சக்திகளால் பரப்பட்டுள்ளது. இடதுசாரிகள், தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்களாலும், சதித்திட்டங்களை உருவாக்கும் நபர்களாலும், இந்தியாவிற்கான அர்ப்பணிப்பு அற்றவர்களாலும் இந்த கவிதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியா முழுவதும் விரைவாக குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் அனைத்து பகுதிகளிலும் சுறுசுறுப்பாக இயங்குவது போலவே இலக்கியத்திலும் தவறான நோக்கங்களுடன் களம் இறங்கியுள்ளனர் என்று பாண்டியா கூறியுள்ளார்.

இந்த இலக்கிய நக்சல்களின் நோக்கம், தங்கள் சொந்த வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் தொடர்புபடுத்தும் ஒரு பகுதியினர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஆகும். குஜராத்தியில் இந்த தலையங்கத்திற்கு இலக்கிய நக்சல்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. காக்கரின் ஆரம்பகால பணிகள் குறித்து பேசும் தலையங்கம், வருங்காலத்தில் சிறப்பான படைப்புகளை அவர் தந்தால் நிச்சயமாக குஜராத்தி வாசகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் கவிதைக்கான சாரமும் இல்லை, கவிதை அப்படி எழுதப்படவும் கூடாது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இது இருக்கிறது. இதனை தாராளவாதிகள, மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரானவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். காக்கர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது இல்லை. ஆனால் இது கவிதையும் இல்லை. சில பகுதிகள் சமூகத்தின் துண்டாடலுக்கு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய விஷ்ணு பாண்டியா இதனை குறிப்பிட்டார்.

மே 11ம் தேதி 14 வரிகள் கொண்ட கவிதை ஒன்றை முகநூலில் பதிவு செய்தார். பல முறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment