”இந்தியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது” – பாஜக எம்.பியின் தனிநபர் மசோதா

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலை ஆகியவை ஏற்பட்டு வருகிறது

By: November 23, 2019, 1:49:08 PM

Deeptiman Tiwary

Population control bill uniform civil code bjp winter session :  நரேந்திர மோடி சுதந்திர தின விழா உரையின் போது தன்னுடைய உரையில் நாட்டின் மக்கள் தொகை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்.பி. ‘மக்கள் தொகை கட்டுப்பாடு’ தனிநபர் மசோதா ஒன்றை நேற்று (22/11/2019) பாராளுமன்றத்தில் தாக்கல் செட்ய்ஹார். நைனிதால் – உதம்சிங் நகர் தொகுதியின் பாஜக எம்.பியான இவர் தன்னுடைய தனிநபர் மசோதாவில் “ஒரு இணையர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்றும், அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால் அரசின் நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிக்க கூடாது. ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அளவுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்கிறது இந்தியா. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலை ஆகியவை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார்.

To read this article in English

அந்த மசோதாவில் “முதல் குழந்தைக்கு பின்பு இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறந்தால் மட்டுமே விலக்கு தரப்படும். மேலும் இதற்காக மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகளும் மாவட்டம் தோறும் கமிட்டிகளை உருவாக்க வேண்டும். அந்த கமிட்டி இந்த திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். இந்த திட்டத்தை அமல்படுத்த ரூ. 500 கோடி வருடந்தோறும் தேவைப்படும்.

சுதந்திர தின விழா உரையின் போது மோடி “சிறிய குடும்பங்களாக வசிக்கும் மக்களை நாம் கௌரவிக்க வேண்டும். அவர்களை எடுத்துக்காட்டாக கொண்டு, சிறிய குடும்பங்கள் பற்றி யோசிக்காத மற்றொரு பகுதி மக்களை நாம் சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நாம் வருத்தம் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தனிநபர் மசோதா வெகு குறைவாகவே நிறைவேறியுள்ளன. இது நாள் வரையில் 14 மசோதாக்களே சட்டமாகியுள்ளது. ஆனால் சில நேரங்களில் இம்மசோதா வாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளப்படாது. கடைசியாக உச்சநீதிமன்றத்தின் குற்றவியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் மசோதா ( Supreme Court (Enlargement of Criminal Appellate Jurisdiction Bill ) 1970 இல் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பு திருத்த மசோதா

இதற்கிடையில், உத்தரபிரதேச பாக்பத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., சத்யபால் சிங், அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். “சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் இந்துக்களுக்கும் கிடைக்க வேண்டும்” என்று முன்மொழிந்தார். “அரசியலமைப்பு சிறுபான்மையினர் தங்கள் மதத்தளங்கள்,  கல்வி நிறுவனங்களையும் தங்கள் சொந்த விதிகளின்படி நடத்த அனுமதிக்கிறது. ஆனால் இந்துக்களுக்கும் இது அனுமதிக்கப்படவில்லை. ஷிர்டி மற்றும் திருப்பதி கோயில்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன, ”என்றார் சிங்.

அவரது மசோதா பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஃபிரோஸ்கானுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்ததா என்று கேள்வி எழுப்பிய போது “முதலில், எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களின் பார்வையில் நான் உடன்படவில்லை. இரண்டாவதாக, நான் இந்த மசோதாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தினேன். ” என்று பதில் கூறினார்.

யூனிஃபார்ம் சிவில் கோட் திருத்த மசோதா

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 44ல் ”இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு சீரான சிவில் குறியீட்டைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்” என்று கூறியுள்ளதை மேற்கோள் கட்டியிருக்கிறார் எம்.பி. பாட். மேலும் அதில் ”பல்வேறு மதத்தினர் வாழும் நாடு இது. தனிப்பட்ட வாழ்க்கை, கல்யாணம், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற விசயங்களில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு வழியை பின்பற்றி வருகின்றனர். உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சீரான சட்டம் என எதுவும் தற்போது இல்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமான நீதி, சமத்துவம் இருப்பதை உறுதி செய்ய யூனிஃபார்ம் சிவில் கோட் என்பது அவசியமாகிறது” என்று அவர் அந்த மசோதாவில் குறிப்பிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Population control bill uniform civil code bjp winter session

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X