பாஜக செய்வதை நினைத்து குழந்தை போல் அழ விரும்பவில்லை: பிரகாஷ் ராஜ் பகிரங்க பேட்டி!

சமீப காலமாக  பிஜேபி அரசுக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்,  கர்நாடக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம்  தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக  பிஜேபி அரசு குறித்து  அவர்களுக்கு வாக்கு அளிப்பதற்கு முன் நீங்கல் கட்டாயம் தெரிந்துக்  கொள்ள வேண்டியவை என்று தனது ஜஸ்ட் ஆஸ்கிங் அமைப்பு மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகிறது.

ஆங்கில நாளிதழான  இந்திய எக்ஸ்பிரஸ்க்கு பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பிரத்யேக பேட்டி …

கேள்வி: அரசியல் குறித்து நீங்கள் பேச தொடங்கிய பின்பு அரசியல் கட்சிகள் உங்களை அணுகினார்களா?

பதில்: எல்லோருக்கும் நடப்பது தான். பாஜகவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் என்னை அழைத்தார்கள்.

கேள்வி: மோடி அரசை விமர்சிப்பதால் பாலிவுட்டில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவது மறுக்கப்படுகின்றன என்று நீங்கள் சொல்ல காரணம்?

பதில்: அவர்கள் என்னிடம் பாலிவுட்டில் வாய்ப்புக்கள் வருகிறதா? என்று கேட்டனர். நான் இல்லை என்றேன். அதற்காக நான் பாலிவுட் சினிமாவிற்கு எதிரானவன் இல்லை. பிஜேபி ஆதரவாளர்கள் நான் பாலிவுட் சினிமாவை பற்றி தவறாக பேசினேன் என்று தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். பத்மாவத் போன்ற திரைப்படங்களின் வெளியீட்டின் போது அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது ஊருக்கே தெரியும். குறிப்பாக பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்க்ளை மிரட்டி இருப்பதும் எனக்கு தெரியும். நான் பாலிவுட்டில் நடித்தால், அவர்களுக்கு மோடி அரசால் வர்த்தக ரீதியில் என்ன பிரச்சனை நடக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

கேள்வி: இதே போன்ற சினிமா வாய்ப்புகள் உங்களுக்கு மற்ற மாநிலங்களிலும் தடுக்கப்படுகிறதா?

பதில்: தெற்கில் இருந்து எனக்கு எதிர்ப்பு வந்ததில்லை ஏனென்றாக் தெற்கில் அவர்களின் (பிஜேபி) பேச்சு எடுப்படாது.

கேள்வி: சினிமா துறையில் மட்டும் தான் நீங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறீர்களா?

பதில்: நிறைய விஷயங்கள் உள்ளன, நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு குழந்தையை போல் அதை நினைத்து அழவும் விரும்பவில்லை. நான் என வாழ்க்கையில் எதையும் இழக்கப் போவதில்லை. நான் ஒரு வழியை தேர்ந்தெடுத்திருகிறேன்.அந்த பாதையில் செல்லவே விரும்புகிறேன். குரல் கொடுப்பதற்கு முன்பே இந்த மாதிரியான எதிர்ப்புகள் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. எல்லாவற்றிருக்கும் தயாராக தான் இருக்கிறேன்.

கேள்வி: கர்நாடக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறீர்கள்.. உங்களின் பிரச்சாரம் கர்நாடக தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்: நிச்சயமாக… சமூகவலைத்தளங்களில் எனக்கு கிடைத்துள்ள ஆதரவுகள் ஏராளம்.கண்டிப்பாக சொல்கிறேன் மக்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்களை நேரில் சந்தித்து போது அதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நாட்டின் குடிமகனாக ஒரு சிறு கடமையை செய்து முடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.

கேள்வி: கர்நாடகாவில் மட்டும் தான் உங்கள் ஜஸ்ட் ஆஸ்கிங் அமைப்பின் செயல்பாடு இருக்குமா?

பதில்: நான் ஒரு இந்தியன். இந்தியா முழுவதும் அதன் செயல்பாடு இருக்கும்.

கேள்வி: கர்நாடக மக்களிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: உங்களின் வாக்கு முக்கியம் இல்லை என்று நினைக்க வேண்டாம். ஒரு தனிமனிதரின் வாக்கு ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் என்பதை மறவாதீர்கள். அரசியல் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் தெரிந்து வைத்திருங்கள். கடந்த கால அரசாங்கம் தோல்வி காண நாங்களும் ஒரு காரணம் தான் என்பதை உணருங்கள். பணத்திற்காகவும், மதத்திற்காகவும் ஓட்டு அளிப்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாக்களிப்பதற்கு முன்பு, தயவு செய்து தேசத்தைன் நிலைமை பற்றியும் கருத்தில் கொண்டு வாக்களியுங்கள். இந்தியாவின் இறையாண்மையையும் உள்நோக்கத்தையும் காப்பாற்றுவது பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

கேள்வி: வரும் தேர்தலுக்குப் பிறகு, உங்கள் ஜஸ்ட் ஆஸ்கிங் பிரச்சாரத்தை முன்னெடுப்பீர்களா? அல்லது அதற்கு ஒரு அமைப்பு வடிவத்தை தருவீர்களா?

பதில்: ஜஸ்ட் ஆஸ்கிங் ஏற்கனவே ஒரு அமைப்பு தான். மாவட்ட அளவில் அதை நாங்கள் தற்போது வரை முன்னெடுத்துள்ளோம். அதற்கான குழுக்களையும் உருவாக்கியுள்ளோம், வரும் ஜூன்-ஜூலைக்குப் பின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளோம். எந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தாலும் நங்கள் மக்கள் பிரச்சனையை முன்னெடுப்போம்.

கேள்வி: ஒரே சமயத்தில் அரசியம், சினிமா இவை இரண்டடையும் உங்களால் சமாளிக்க முடியுமா?

பதில்: இந்த நேரத்தில் நான் சினிமாவில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு நடிகனாய் நிரூபிக்க விருப்பம் இல்லை. இதுவே நான் தேர்ந்தெடுத்திருக்கும் வழி. 365 நாட்கள் ஷூட்டிங் என்றால், அதை நான் 200 நாட்களாக குறைத்துக் கொள்வேன்.
கேள்வி: படங்களில் மட்டும் அதிகமாக பேசிய நீங்கள் , நிஜத்தில் பேசும் போது எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: சுதந்திரமாக உணர்கிறேன். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது போன்ற உணர்வு, நான் விடுவிக்கப்பட்டேன். எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close