Advertisment

President poll highlights: முர்மு vs சின்ஹா; எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பு!

India President Elections 2022 News Live Updates: வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.

author-image
WebDesk
New Update
President poll highlights: முர்மு vs சின்ஹா; எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று (ஜூலை: 18) நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு புது டெல்லியிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத் தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

Advertisment

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் தகுதி கிடையாது.

அதன்படி, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

எம்பி, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது. எம்பி, எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்படும். இதற்காக புது டெல்லியில் இருந்து வாக்குப்பெட்டிகள், மாநிலத் தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளும், இதர தேர்தல் உபகரணங்களும் டெல்லிக்கு விமானத்தில்  திருப்பி அனுப்பப்படும்.

வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைய உள்ளது.

பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி, பிஎஸ்பி, அதிமுக, டிடிபி, ஜேடி(எஸ்), சிரோமணி அகாலி தளம், சிவசேனா மற்றும் ஜேஎம்எம் ஆகியோரின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 60 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட தெளிவான முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 14:21 (IST) 18 Jul 2022
    குடியரசுத் தலைவர் தேர்தல்: ப சிதம்பரம் வாக்களிப்பு!

    டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் ப சிதம்பரம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பரூக் அப்துல்லா, எஸ்ஏடியின் சிம்ரஞ்சித் சிங் மான், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகியோர் வாக்களித்தனர்.



  • 14:21 (IST) 18 Jul 2022
    மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்!

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன் ஆகியோர் டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.



  • 13:03 (IST) 18 Jul 2022
    ”ஜனாதிபதி தேர்தல் மற்ற தேர்தலைவிட வேறுபட்டது”- ஆதித்ய தாக்கரே கருத்து

    திரெளபதி முர்முவிற்கு ஆதரவாக வாக்களித்த ஆதித்ய தாக்கரே கூறுகையில், “ ஜனாதிபதி தேர்தல் மற்ற அரசியல் தேர்தலைவிட வேறுபட்டது. இதுதான் உயர்ந்த பதவி என்பதால் சரியான பிரதிநியை நாம் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.



  • 12:31 (IST) 18 Jul 2022
    அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்தார்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்கை செலுத்தினார்.



  • 12:29 (IST) 18 Jul 2022
    ”ஜனநாயகத்திற்கு ஆபத்து”- தேஜஸ்வி யாதவ் கருத்து

    ஆர்ஜேடி தலைவர் மற்றும் எம்.எல். ஏ தேஜஸ்வி யாதவ் கூறுகையில் “ நாட்டில் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை பொறுப்பாக கையாளும் ஜனாதிபதிதான் நமக்கு தேவை. தற்போது இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதிக்கவே பிரதமர் மறுக்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • 12:21 (IST) 18 Jul 2022
    எம்.பி ஹேமா மாலினி வாக்களித்தார்

    பாஜக எம்.பி ஹேமா மாலினி தனது வாக்கை செலுத்தினார்.



  • 12:18 (IST) 18 Jul 2022
    கோவா முதல்வர் வாக்களித்தார்

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வாக்களித்தார். “ கோவாவிலிருந்து 100% வாக்குகள் பதிவாகும். அனைவரும் திரெளபதி முர்முவிற்கு வாக்களிப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • 12:12 (IST) 18 Jul 2022
    காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்

    பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு வாக்களித்தனர்.



  • 11:49 (IST) 18 Jul 2022
    அமித்ஷா, பியுஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் வாக்களித்தனர்

    மத்திய அமைச்சர் அமித்ஷா, பியுஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியகோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.



  • 11:41 (IST) 18 Jul 2022
    மன்மோகன் சிங் வாக்களித்தார்

    முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் வாக்களித்தார்.



  • 11:21 (IST) 18 Jul 2022
    குடியரசு தலைவர் தேர்தல் : மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

    குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.



  • 11:21 (IST) 18 Jul 2022
    ஏக்நாத் ஷிண்டே வாக்குப்பதிவு

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநில சட்டசபையில் வாக்களித்தார்.



  • 11:20 (IST) 18 Jul 2022
    அனுராக் தாக்கூர் வாக்களித்தார்

    மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தார்



  • 11:19 (IST) 18 Jul 2022
    முதல்வர் புஷ்கர் சிங் தாமி வாக்குப்பதிவு

    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாநில சட்டசபையில் வாக்களித்தார்



  • 11:11 (IST) 18 Jul 2022
    எங்கள் சகோதரி இப்போது ஜனாதிபதியாக வருவார்

    போபாலில் உள்ள மாநில சட்டசபையில் திங்கள்கிழமை காலை வாக்களித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த எங்கள் சகோதரி இப்போது ஜனாதிபதியாக வருவார். ம.பி.யில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு வாக்களித்து வருகின்றனர். கட்சிகளின் எல்லைகளுக்கு அப்பால் எழுந்து, நமது மனசாட்சியின் அடிப்படையில் வாக்களித்து, திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்க பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.



  • 11:03 (IST) 18 Jul 2022
    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்

    ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,

    முன்னதாக NDA வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை அறிவித்தது.



  • 10:46 (IST) 18 Jul 2022
    தெலுங்கானா சட்டசபையில் வாக்குப்பதிவு

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் வந்தனர்.



  • 10:42 (IST) 18 Jul 2022
    டெல்லி சட்டசபையில் வாக்குப்பதிவு தொடங்கியது

    தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சிவசரண் கோயல் மற்றும் பாவ்னா கவுர் மற்றும் பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட் ஆகியோர் முதலில் வாக்களித்தனர்.

    70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், ஆளும் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், மீதமுள்ளவை பாஜகவுக்கும் சொந்தமானது.



  • 10:36 (IST) 18 Jul 2022
    நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்குப்பதிவு

    இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க திங்கள்கிழமை மாலை 5 மணி வரை சுமார் 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.



  • 10:34 (IST) 18 Jul 2022
    குஜராத் முதல்வர் வாக்களித்தார்

    இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் காந்திநகரில் வாக்களித்தார்



  • 10:31 (IST) 18 Jul 2022
    பிரதமர் மோடி வாக்களித்தார்

    புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் திங்கள்கிழமை வாக்களித்தார். பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஜேபி நட்டா அடுத்து வாக்களித்தார்.



  • 10:28 (IST) 18 Jul 2022
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வாக்களித்தார்

    புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வாக்களித்தார். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.



  • 10:26 (IST) 18 Jul 2022
    உ.பி., முதல்வர் யோகி வாக்களித்தார்

    புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் வாக்களித்தார்.



  • 10:25 (IST) 18 Jul 2022
    குடியரசுத் தலைவர் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கியது

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் தொடங்கியது. ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க சுமார் 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவுள்ளனர்.



  • 09:56 (IST) 18 Jul 2022
    நியாயமான தேர்தலுக்கான ஏற்பாடுகள்

    ராஜ்யசபாவின் பொதுச்செயலாளர் பி.சி.மோடி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவரை சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    "நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறிப்பாக வாக்களிக்கும் இடம் பலப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.



  • 09:54 (IST) 18 Jul 2022
    திரௌபதி முர்முவின் வெற்றி உறுதி: ஆஷிஷ் ஷெலர்

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜகவின் தலைமைக் கொறடா ஆஷிஷ் ஷெலர், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி என்றார்.

    “அவர் மகாராஷ்டிராவில் சாதனை வாக்குகளைப் பெறுவார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.



  • 09:51 (IST) 18 Jul 2022
    மாநில சட்டசபைக்கு புறப்பட்ட, வங்காள பாஜக எம்எல்ஏக்கள்

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக திங்கள்கிழமை காலை தி வெஸ்டின் கொல்கத்தா ராஜர்ஹட்டில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய டார்ஜிலிங்கின் பாஜக எம்எல்ஏ நீரஜ் தமாங் ஜிம்பா, இந்த விழாவை 'வரலாற்று நிகழ்வு' என்று அழைத்தார். இது (ஜனாதிபதி தேர்தல்) வெறும் சம்பிரதாயம். அவள் ஏற்கனவே வெற்றி பெற்றாள். நாட்டின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பார் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது மகிழ்ச்சியான சந்தர்ப்பம்,'' என்றார்.



  • 08:30 (IST) 18 Jul 2022
    பழங்குடி சமூகம் உற்சாகமாக உள்ளது.. முர்மு

    குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை, பழங்குடி சமூகத்தை, குறிப்பாக அதன் பெண்களை " உற்சாகமாக மாற்றிய ஒரு வரலாற்று தருணம் என்று விவரித்தார்,



India President Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment