PM Modi Speech on coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாட்டின் பல முக்கிய நகரங்களும் மாநிலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அந்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக அளவில் கொரோனா வைரஸால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 10 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தியாவில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ அரசு கடந்த மார்ச் 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மார்ச் 20-ம் தேதி ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொண்டதன் பேரில் நாடு முழுவதும் மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் மட்டும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நேற்று தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களிடம் 2வது முறையாக ஊடகங்கள் மூலம் பேசுகிறார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களுக்கு செயல்படும் சேவைகள்:
ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து கடைகள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகள் செயல்படும், பெட்ரோலிய பொருட்கள் கேஸ் ஏஜென்ஸிகள் செயல்படும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் செயல்பட அனுமதி. அத்தியாவசியப் பொருட்களை உற்பத்திய் செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி. வங்கிகள் ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம்போல் இயக்கும் – உள்துறை அமைச்சகம்
பிரதமர் மோடி: நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கொரோனா தடுப்பில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறேன். வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
பிரதமர் மோடி: நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கொரோனா தடுப்பில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறேன். வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
பிரதமர் மோடி: 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் மக்கள் பிரார்த்திக்க வேண்டும். மருத்துவத்துறையினர் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர். கொரொனா சிகிச்சைகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
பிரதமர் மோடி: வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. அரசுடன் மக்கள் ஒத்துஐத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுபடுத்துவது சாத்தியம். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமை காத்து ஆதரியுங்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியேறினால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்துவைக்கும்.
பிரதமர் மோடி: கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது. கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீகளோ அங்கேயே இருங்கள். பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
பிரதமர் மோடி: உறவினகள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நாம் பேரழிவை சந்திக்க நேரிடும். ஒருவருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும் கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவிவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி: ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க 3 வாரம் சமூக விலகல் என்பது முக்கியம். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முடிவு என்பது உங்களை உங்கள் குடும்பத்தை காப்பாற்ற எடுக்கப்படுகிறது.
பிரதமர் மோடி: கொரோனாவால் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது இன்று இரவு 12 மணி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு.
அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிரதமர் மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். கொரோனாவை அலட்சியம் செய்யக்கூடாது; கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது. கொரோனை சமாளிக்க சமூக விலகல்தான் ஒரே தீர்வு
பிரதமர் மோடி: மீண்டும் ஒருமுறை கொரோனா குறித்து பேச வந்திருக்கிறேன். குழந்தைகள் வியாபாரிகள் பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை. எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது