Advertisment

பிராமணர்களை தவறாக பேசிய நிர்வாகி நீக்கம்: ஓபிசி- தலித் சமூகத்தினரின் எதிர்ப்பால் தவிக்கும் ம.பி. பாஜக

பார்ப்பனர்கள் பெரிய மனத்துடன் என்னை மனிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் மன்னிப்பதற்கு பதிலாக என்னை நீக்கிவிட்டனர். எனது மனிப்புக்கு கிடைத்த பரிசு இது “ என்று அவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
பிராமணர்களை தவறாக பேசிய நிர்வாகி நீக்கம்: ஓபிசி- தலித் சமூகத்தினரின் எதிர்ப்பால் தவிக்கும் ம.பி. பாஜக

பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட  பிரிதம் சிங் லோதி, ஓபிசி சமூகத்தின் தலைவர் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மத்திய பிரதேசத்தின் பிச்சோர்  தொகுதியில் மாபெறும் பேரணியை நடத்துள்ளார். இதில் 7ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

மூன்று நாட்களுக்கு முன்பாக பார்ப்பனர்கள் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியதற்காக, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார் பிரிதம் சிங் லோதி. இந்நிலையில் இவர் தலைமையேற்று நடத்திய பேரணி மத்திய பிரதேசத்தின் பாஜகவினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேரணியில் ஓபிசி சமூகத்தினர் அதிகமானோர் கலந்துகொண்டனர். மேலும் அவர்கள் பாஜக தலைவர் விடி ஷர்மா மற்றும் மத்திய அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்கள் குவாலியர்- சம்பல் பகுதியில் உள்ள முக்கிய பார்ப்பன தலைவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த மாபெறும் கூட்டத்தில் லோதியின் உறவினரான முன்னாள் மத்திய அமைச்சர் உமா பார்த்தியும் கலந்துகொண்டார். இந்த பேரணியை ஓபிசி மகாசபை முன்னெடுத்து நடத்தி உள்ளது.

ஓபிசி பிரிவினருக்கான கணக்கெடுப்பு மற்றும் கூடுதலாக இட ஒதுக்கீடு கேட்டு பிச்சோர்  தொகுதியில் வருகின்ற 28ம் தேதி மேலும் ஒரு பேரணியை நடத்த உள்ளதாக பிரிதம் சிங் லோதி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் மக்கள் தொகையில் 50 % ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

22ம் தேதி நடைபெற்ற பேரணிக்கு முன்பாக, பீம் ஆர்மி இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் அசாத்தை, பிரிதம் சிங் லோதி குவாலியரில் சந்தித்து பேசினார். சந்திரசேகர் அசாத் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார்.

லோத்தியும் அசாதும் சேர்ந்து ஓபிசி மற்றும் தலித் தலைவர்களை ஒன்றாக இணைத்து மாற்றத்தை கொண்டு வரப்போவதாக அவர் கூறியுள்ளார். “ எல்லா சமூகத்தினரும் ஒன்றாக இணைந்தால் மாற்றம் பிறக்கும்.  மேலும் சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி 2023 மாநிலத் தேர்தலை சந்திக்க உள்ளோம் “ என்று அவர் கூறியுள்ளார்.

ஓபிசி மகாசபையில் தன்னை இணைத்துக்கொண்ட பிரிதம் சிங் லோதி கூறுகையில் “ இரு சமூகத்தினருக்கு இடையே எதிர்ப்பு ஏற்படுத்தும் வகையில் நான் பேசியதை திசைதிருப்ப பார்த்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக  விடி ஷர்மா மற்றும் உமா பார்த்தி அவர்கள் என்னை அழைத்தனர். நான் மனிப்பு கடித்தையும் சமர்பித்தேன். பார்ப்பனர்கள் பெரிய மனத்துடன் என்னை மனிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் மன்னிப்பதற்கு பதிலாக என்னை நீக்கிவிட்டனர். எனது மனிப்புக்கு கிடைத்த பரிசு  இது “ என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சுவ்புரா மாவட்டத்தில் மாணவர்களுக்கான நிகழ்வு ஒன்றில் பார்ப்பனர்கள் குறித்த சர்ச்சை கருத்தை பிரிதம் சிங் லோதி பேசியதால் அவர் 6 ஆண்டு காலம் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக கடந்த 19ம் தேதி மத்திய பிரதேசத்தின் பாஜக கட்சி அறிவித்தது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment