Advertisment

அதிருப்தி தெரிவித்த தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ப்ரியங்கா காந்தி

உடைந்து போன ஒரு கட்சியால் பாஜகவை வெற்றிக் கொள்ள முடியாது என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்

author-image
WebDesk
New Update
அதிருப்தி தெரிவித்த தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ப்ரியங்கா காந்தி

Priyanka call to Azad broke ice, brought Sonia, letter writers to discussion table :  காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்த குலாம் நபி ஆசாத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ப்ரியங்கா காந்தி. அதே ஆலோசனை கூட்டத்திற்கு சோனியா காந்தியும் வரவழைக்கப்பட்டு கட்சியில் இருக்கும் பதட்டமான சூழலை குறைக்கும் வகையில் ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டார் ப்ரியங்கா.

Advertisment

ப்ரியங்கா கடிதம் எழுதியவர்கள் சிலருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது. அவர் நல்லிணத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார், மேலும் உடைந்து போன ஒரு கட்சியால் பாஜகவை வெற்றிக் கொள்ள முடியாது என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். 23 தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக தான் இருந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாதம் அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு பிறகு பேச்சுவார்த்தைக்கான சிறிய சாத்தியங்களை மட்டுமே வழங்கியது. மேலும் அவர்களின் நிலையை கடினப்படுத்தியது. அப்படி கடிதம் எழுதியவர்கள் மீது விமர்சனங்களை முன் வைத்ததும், அவர்களின் கருத்தை தலைமை புரிந்து கொள்ள முயற்சிக்காததும் அவர்களை மேலும் காயப்படுத்தியது.

ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி நவம்பர் 27ம் தேதி அன்று அகமது படேல் மற்றும் தருண் கோகாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்த ஒரு இணைய வழி அஞ்சலி கூட்டத்தை நடத்தியது. இரு தரப்பினரும் தங்களை பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தான் முதன்முறையாக ஆசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா போன்ற தலைவர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காக பல தலைவர்களும் தங்களின் வேண்டுகோளை விடுத்தனர். கட்சியில் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளித்த ப்ரியங்கா காந்தி, காங்கிரஸின் ஒற்றுமை தான் படேலுக்கு மிகப்பெரிய அஞ்சலி என்றும் கூறினார்.

சிம்லாவில் இருந்து திரும்பிய பிறகு ஆசாத் பிரியங்காவுடன் பேசியதாக தெரிய வருகிறது. அதன் பின்னர் அவர் ஆசாத் மற்றும் ஷர்மாவையும் சந்தித்து பேசினார். ஆலோசனை கூட்டமே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை இதற்கிடையில் சந்தித்து பேசி மாநாட்டு யோசனை ஒன்றை முன்வைத்தார். கடிதம் எழுதிய முக்கிய உறுப்பினர்களையும் அவர் சந்தித்து பேசினார். ஆலோசனை கூட்டங்களுக்கான நாட்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ரியங்கா தான் இந்த மௌனத்தையும் பதற்றத்தையும் உடைத்தார். நாம் அனைவரும் இறுதியில் காங்கிரஸ் கட்சியினர் தான். நாங்கள் யாருமே இந்த விவகாரம் நீண்ட நாட்களுக்கு தொடர்வதை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருந்து பாஜகவை எதிர்த்து போராடுவது தான் ஒரே வழி என்று நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்கு எங்கேனும் தொடக்கப்புள்ளி இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 நபர்களில் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியைத் தணிப்பதில் பிரியங்கா ஒரு முக்கிய பங்காற்றினார். அவர் முதல்வர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக பிரச்சனையில் ஈடுபட்ட சச்சின் பைலட்டை அணுகினார். நெருக்கடி நிலவிக்கொண்டிருந்தபோது, ​​ராகுல் காந்தி சார்பாக அவரை சமாதானப்படுத்த பிரியங்கா பைலட்டுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment