’பயமே என்ன பாத்து பயப்படும்’! – பிரியங்கா காந்தியின் அசாத்திய துணிச்சல்!

Priyanka Gandhi playing with snakes: “பயப்படாதீங்க எதுவும் ஆகாது. இதெல்லாம் நல்லாருக்கு” என கூலாக பதிலளித்த பிரியங்கா தான் தற்போதைய வைரல். 

By: Updated: May 2, 2019, 03:38:46 PM

 Priyanka Gandhi playing with snakes: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் வேளையில், ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன.

இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

வரும் 6-ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. இதில் அமேதியில் ராகுல்காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களுடன் உத்திரபிரதேசம் மாநிலம் முழுவதும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் பிரியங்கா.

Priyanka Gandhi’s Video goes Viral

தான் அரசியலுக்கு வந்து சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், மிகுந்த கவனத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். அவரது அரசியல் வருகையை முன்பு எதிர் அணியினர் கேலி செய்தனர். ஆனால் நாளடைவில் மக்கள் பிரியங்காவுக்குக் கொடுக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் இன்று ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா, அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த பாம்பாட்டிகளிடம் பேசிய அவர், பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்பை தூக்கி ‘அசால்ட்டாக’ விளையாடினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.


அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி என அனைத்தும் கலந்த கலவையுடன் அந்த பாம்பாட்டிகள் தங்களிடம் இருந்த மற்ற பெட்டிகளையும் திறந்து காண்பித்தனர். அப்போது அந்த பாம்புகளையும் கையில் தூக்கி விளையாடிய பிரியங்கா, அவற்றைப் பற்றி பாம்பாட்டிகளிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார்.

அங்கிருப்பவர்கள் பயத்தில் கத்த, “பயப்படாதீங்க எதுவும் ஆகாது. இதெல்லாம் நல்லாருக்கு” என கூலாக பதிலளித்த பிரியங்கா தான் தற்போதைய வைரல்.

ஆம்! பிரியங்காவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Priyanka gandhi raebareli uttar pradesh lok sabha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X