Advertisment

ஆசிரியரை கொலை செய்ய ரூ.1000 - மும்பையை உலுக்கிய சம்பவம்

மாணவனின் இரண்டு நண்பர்களுடன் ஒரு மாலுக்குச் சென்றார் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அங்கு, அவர் ஒரு துரித உணவு நிலையத்தில் ரூ.750 மற்றும் கேமிங் சென்டரில் ரூ.250 பில் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Probe shows minor spent Rs 1,000 he was ‘paid’ to kill teacher, says mumbai Police - ஆசிரியையை கொலை செய்ய கொடுக்கப்பட்ட ரூ.1000 - நண்பர்களுடன் செலவு செய்த மாணவன் : மும்பையை உலுக்கிய கொலை

Probe shows minor spent Rs 1,000 he was ‘paid’ to kill teacher, says mumbai Police - ஆசிரியையை கொலை செய்ய கொடுக்கப்பட்ட ரூ.1000 - நண்பர்களுடன் செலவு செய்த மாணவன் : மும்பையை உலுக்கிய கொலை

மும்பையில் டியூசன் ஆசிரியரை அவரிடம் படிக்கும் மாணவன் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கொலையில் மாணவனின் வாக்குமூலம் போலீஸாரை குழம்ப வைத்துள்ளது.

Advertisment

மும்பை சிவாஜி நகரில் வசித்து வருபவர் ஆயிஷா அஸ்லம் ஹூசாய். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ள அவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி அவரிடம் படிக்கும் கோவந்தி பகுதியை சேர்ந்த 12 வயது மாணவன் தனது தாய் அவரிடம் பணம் கேட்டதாக கூறியுள்ளான். ஆனால், ஆசிரியை மறுத்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து சிறுவன் மீண்டும் ஆசிரியையிடம் சென்று பணம் கேட்டுள்ளான். ஆனால் மீண்டும் மறுத்த ஆசிரியை மற்ற மாணவர்கள் முன்பு அவனை திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ஆசிரியையின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியுள்ளான். எனவே, வீட்டிலிருந்த அலாரத்தை அவர் ஒலிக்க செய்தார். எனவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

அதே சமயம், என் மகன் நன்றாக படிப்பவன். ஆசிரியையிடம் பணம் கேட்டு நாங்கள் அனுப்பவில்லை என சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது, சிறுவனின் தாய் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்தார். இந்தச் சூழ்நிலையில், ரூ.1000 பணம் கொடுத்து அந்த ஆசிரியையை சிலர் கொலை செய்ய சொன்னதாக அந்த சிறுவன் போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை போலீசார் கூறுகையில், அந்த மாணவன் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று ரூ.1000 செலவு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றனர். அதே மாலில் தான் தன்னிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஆசிரியையை சிலர் கொலை செய்யச் சொன்னதாக அம்மாணவன் முன்பு கூறியிருந்தார். இதற்காக சிசிடிவி ஆய்வு செய்து வருவதாக காவல்துறை கூறியுள்ளது.

அதேசமயம், ஆசிரியையைக் கொல்ல ஒரு நபர் தனக்கு ரூ .1,000 கொடுத்ததாகவும், பின்னர் ரூ .5 ஆயிரம் கொடுப்பதாக உறுதியளித்ததாகவும் அம்மாணவன் போலீஸிடம் கூறியிருக்கிறான். பர்கர்கள் வாங்கியும், இரண்டு நண்பர்களுடன் வீடியோ கேம்ஸ் விளையாடியும் ஆயிரம் ரூபாயை செலவிட்டதாக அவன் கூறினான்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மாணவனின் இரண்டு நண்பர்களுடன் ஒரு மாலுக்குச் சென்றார் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அங்கு, அவர் ஒரு துரித உணவு நிலையத்தில் ரூ.750 மற்றும் கேமிங் சென்டரில் ரூ.250 பில் ஆகியுள்ளது. அதை சரிபார்க்க நாங்கள் இப்போது மாலில் சி.சி.டி.வி காட்சிகளை ஸ்கேன் செய்கிறோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார். "அம்மாணவன் ஆசிரியையை கொலை செய்யாவிட்டால், அவன் கொல்லப்படுவான் என்றும் அவனது உடல் வடிகாலில் வீசப்படும் என்றும் அவன் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இப்போதைக்கு எங்களால் உறுதியாக எதுவும் கூற முடியாது," என்று தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில் 13 வயதை எட்டவுள்ள அந்த மாணவன், பயந்திருப்பதன் காரணமாக கொலைக்கு பலவிதமான காரணங்களை கூறுவதாக எண்ணுகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment