முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடி திடீர் சந்திப்பு!

தனியாக சென்று, ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்தும் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்து வந்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை, முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்ற நாள் முதலே, அவருக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இயங்கும் அரசுக்கும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகள், எதிர்மறையான கருத்துகள் நிலவி வருகின்றன. தனியாக சென்று, ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்தும் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனையடுத்து, பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்களை, கிரண்பேடி தன்னிச்சையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தது முதல்வர் நாராயணசாமி அரசை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியது. இந்நிலையில், சுமார் ஒரு வருடங்களுக்கு பிறகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில் அரசு பணிகள் குறித்து ஆளுநருடன் முதல்வர் நேரிடடியாக கலந்துயோசித்து ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வெவ்வேறு கொள்கைகளில் பிரிந்து செயல்பட்ட, கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமியின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close