Advertisment

அண்ணாமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: உருவ பொம்மை எரித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

வாயைத் திறந்தாலே பொய்யும் புரட்டும் தவிற வேறு எதுவும் பேசாத அண்ணாமலை தனது பொய் பேச்சுக்கு இந்த நாட்டு பிரதமரையும் துணைக்கு அழைத்துள்ளார்- புதுச்சேரி செயலாளர் அன்பழகன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pudu admk1

அ.தி.மு.க பொதுச் செயலாளர்,  முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி பற்றி மரியாதை குறைவாக பாஜக தலைவர் அண்ணாமலையை பேசியதைக் கண்டித்து புதுச்சேரி உப்பளம் தலைமை கழகம் எதிரில் புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாமலையின் உருப்படத்தை கிழித்து எரித்தும்,  தீயிட்டுக் கொளுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

WhatsApp Image 2024-08-27 at 13.22.14

பின்னர் செய்தியாளர்களிடம் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசியதாவது,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலிவு விளம்பர அரசியலுக்காக நாவடக்கம் இன்றி பேசி வருவதை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து கழகத்தில் கிளைக்கழக செயலாளராக அரசியலில் ஈடுபட்டு தனது 40 ஆண்டு கால கடின உழைப்பாலும் விசுவாசத்தாலும் கழக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் உயர்நிலைக்கு வந்தவர் எங்களின் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆவார். அவரைப் பற்றி அவதூறாக பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது.

வாயைத் திறந்தாலே பொய்யும் புரட்டும் தவிற வேறு எதுவும் பேசாத அண்ணாமலை தனது பொய் பேச்சுக்கு இந்த நாட்டு பிரதமரையும் துணைக்கு அழைத்துள்ளார். 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கதல் செய்தபோது அப்போதைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் செல்ல மறுத்ததாக குற்றச் சாட்டைக் கூறியுள்ளார்.

New Project - 2024-08-27T145608.001

2021 ஜீலை 8-ம் தேதி தமிழக பிஜேபி தலைவராக பதவி ஏற்ற அண்ணாமலைக்கு 2019-ம் தேதி நடக்காத நிகழ்வை பற்றி பேசுகிறார். 2019-ம் ஆண்டு இவர் அரசு அதிகாரியாக பணியில் இருந்தவர். அண்ணாமலை பேச்சு தொடர்ந்து சட்டம் ஒழுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. மறைந்த ஒப்பற்றத் தலைவர்களைப் பற்றியும் தற்போதைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றியும் தரம் தாழ்ந்து பேசுவதையே அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு எதையாவது பேசி கலவரத்தை தூண்டும் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

WhatsApp Image 2024-08-27 at 13.22.12

புதுச்சேரி அரசுத் துறையில் 256 அமைச்சக உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இப்பணிக்கு பணியாளர்கள் தேர்வு நடத்தப் படவில்லை. தற்போது பொதுப் பிரிவிற்கு 30 வயதை உச்ச வரம்பாக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுப் பிரிவில் தற்போதுள்ள 30 வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டு காலம் நீட்டிப்பு செய்து 35 வயதாக வயது உச்சவரம்பை அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment