எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவச கல்வி – புதுச்சேரி முதல்வர்

ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு; எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இலவச கல்வி; புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Puducherry assembly
புதுச்சேரி சட்டசபை

எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவச கல்விக்கு அரசாணை வெளியிடப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சொத்துவரி செலுத்துவதில் 20% சலுகைகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் ஊதியம் ரூ. 6 ஆயிரம் வாங்கி வந்தனர். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை ரூ. 15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படும். வருவாய்த்துறையில் தினக்கூலி ஊதியம் உயர்த்தப்படும்.

எஸ்சி, எஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்தோம். சென்டாக் மூலம் மட்டுமில்லாமல், இதர வழிகளிலும் படிக்கும் அனைவருக்கும் நிதி தரப்படும். சிறப்புக் கூறு நிதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்வோம். இதற்காக அரசாணை வெளியிடப்படும். கல்வித் துறையில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கும் ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என்று கூறினார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry budget session cm rangasamy announces free education to sc and st students

Exit mobile version