/tamil-ie/media/media_files/uploads/2023/01/Tamilisai-Governor.jpg)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பொங்கல் விழா கொண்டாடினார் ரெண்டு மணி நேரம் இந்த விழாவிற்கு முதலமைச்சர் தமாதமாக வந்து விழாவில் கலந்து கொண்டார். இதேபோன்று கிறிஸ்மஸ் விழா கவர்னர் மாளிகையில் கொண்டாடிய போது அப்பொழுதும் இரண்டு மணி நேரம் லேட்டாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று(12-01-2023) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் விருந்தினர்கள் முன்னிலையில் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-12-at-4.48.52-PM-1.jpeg)
முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் க. ஜெயக்குமார், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திரு சாய். ஜே சரவணன் குமார், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், தப்பாட்டம், கிராமிய நடனம், பம்பை உடுக்ககை, பொய்க்கால் குதிரை, கட்டைக் கால் நடனம் ஆகியவை நிகழ்த்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்ததை நினைவு கூறும் வகையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு விருந்தில் பரிமாறப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் துணைநிலை ஆளுநர் பேசியதாவது:
/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-12-at-4.48.54-PM.jpeg)
*அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கலை ஜி-20 பொங்கல் என்றே குறிப்பிடலாம். நமது நாடு பெருமை கொள்ளும் அளவிற்கு ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்கப்போகிறோம். புதுச்சேரியில் இந்த மாநாடு 30, 31 தேதிகளில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. அதற்கான இலட்சனையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் அது மட்டுமல்லாமல் புதுச்சேரியைப் பொருத்தமட்டில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அத்தனை திட்டங்களும் கொண்டு வரப்படுகிறது.
*தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றும் விழாவாக இந்த பொங்கல் விழா அமைந்திருக்கிறது. துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறோம். வட இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள்கூட நமது பாரம்பரிய உடைகளில் வந்து அசத்தியிருக்கிறார்கள். இதைத்தான் எதிர்பார்க்கிறோம். எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றும் போது அதனால் மக்கள் பலன் பெறுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-12-at-4.48.52-PM.jpeg)
*பால் விலை உயர்வு இது வலி தரக்கூடியதுதான். நமக்கே ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் சில நிகழ்வுகள் நடைபெறும் .பால் விலை உயர்தியதில் எனக்கும் வருத்தம் தான். பொதுமக்களோடு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகம் விலை உயர்வை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. பாண்லே நிறுவனத்தை அழைத்து கூட்டம் போட்டிருந்தோம். புதுச்சேரி மாநிலத்தில் இருந்தே பொதுமக்களிடமிருந்தும் பால் முகவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் அளவிற்கு புதுச்சேரி பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முயற்சிக்கு பிறகு விலை ஏற்றக்கூடாது என்பது எனது கோரிக்கை. எல்லா தாய்மார்களோடு நானும் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
*பாரதப் பிரதமர் நேரடி வங்கி பணப் பரிமாற்றம் என்று குறிப்பிடுவது, மக்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். ஒரு சிறிய தொகை கொடுத்து அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரடி பண பரிமாற்றத்தில் உள்ள மிகப்பெரிய பலன் இதுதான். நாம் கொடுக்கின்ற பொருள் அவர்களுக்கு தேவை இல்லாததாககூட இருக்கலாம். அவர்கள் விருப்பப்படும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற முழு உரிமை அவர்களுக்கு கொடுக்கிறோம் அதுதான் நேரடி பண பரிமாற்றம். அதனால் மக்கள் பலன் பெறுகிறார்கள். மக்கள் இதை விரும்புகிறார்கள்.
*எந்த கோப்பும் என்னிடம் கிடப்பில் இல்லை. சில காரணங்களுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயம். அதனால்தான் கொள்கை ரீதியாக சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது.
*நியாய விலைக் கடைகள் திறப்பு என்பது பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
*எது எப்படி இருந்தாலும் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சில உதவிகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆளுநர் என்ற முறையில் மக்களுக்கு பலன் தரும் என்ற வகையில் ஒப்புதல் அளிக்கிறேன். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததற்கு நான் ஒப்புதல் கொடுத்து இருக்கிறேன்.
*சில நிர்வாக காரணங்களுக்காக சில விலைஏற்றங்கள் வரும்போது அதை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதில் மக்களுக்கு உதவி செய்கிறோம். நிர்வாகம் என்பது இரண்டையும் சமமாக நடத்திச் செல்ல வேண்டும்.
*சாராய வடிசாலை திறப்பு குறித்து பேசியவர், அரசு நஷ்டப்படும் அளவிற்கு இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்ல முடியும். அபராத தொகைக்கு பிறகு, பல நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கே பணிபுரிகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய பிறகுதான் வடிசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் பலன் பெறும் அளவிற்கு தான் புதுச்சேரியில் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.