புதுச்சேரியில் காவலர்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் 356 காவலர்கள் 60 எஸ். ஐ. 500 ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் 27 ஓட்டுனர்கள் என காவல்துறை அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பேசிய அமைச்சர் நமச்சிவாயம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றார்.
புதுச்சேரி காவல் துறையில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் பணியாணை வழங்கும் நிகழ்ச்சி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணை அடிப்படையில் உள்ள 19 பேருக்கு பணி ஆணைக்கான சான்றிதழை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: “புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு போக்குவரத்து நெரிசலையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றார்.
புதுச்சேரியில் மேலும் காவலர்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் 356 காவலர்கள் 60 எஸ். ஐ. 500 ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் 27 ஓட்டுனர்கள் என காவல்துறை அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பேசிய அமைச்சர் நமச்சிவாயம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றார்.
மேலும் கடலோரக் காவல் படையை மேம்படுத்த மேலும் 200 ஊர்காவல் படை வீரர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் பழமையானதாக உள்ளது புதிய வாகனங்கள் வாங்குவதற்கு காவல்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையம் சிசிடிவி கேமரா பொறுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஆபரேஷன் திரிசூல் படி குற்றவாளிகள் தொடர்ந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் இதனால் குற்ற சம்பவங்கள் புதுச்சேரியில் குறைந்துள்ளதாக பேசிய நமச்சிவாயம் புதுச்சேரியில் போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்களையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது என்றார்.
புதுச்சேரியில் தற்போது ஊர்காவல் படை வீரர்களுக்கு சீருடை படியாக மாதம் 90 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது இதை மாற்றி டெல்லியில் வழங்கப்படுவது போல் வருடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் சீருடை படி வழங்கப்படும் என்று பேசிய நமச்சிவாயம் லாஸ்பேட்டை புதிய காவல் நிலைய கட்டுமான பணி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
மேலும் புதுச்சேரி காரைக்காலில் உள்ள எஸ்பி கோட்ரசுகள் பழமை அடைந்துள்ளது இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி அரசுக்கு சட்ட ஒழுங்கை பாதுகாப்பதிலும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதிலும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வரும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
காவல் துறையில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 19 ஊர் காவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி காவலர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு 19 பேருக்கு பணி ஆணையை வழங்கினார். அருகில் டி.ஜி.பி மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி ஆனந்த மோகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடந்து பணி ஆணையை பெற்றவர்கள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை தலைவர் மனோஜ் குமார் துணைத் தலைவர் அனந்த மோகன் மற்றும் கிழக்கு பிரிவு எஸ்.எஸ்.பி தீபிகா, உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“