ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் பணிகளை மேற்கொண்டார்.
புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து கிரண் பேடி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
சாலை விதிமீறல் செய்தவர்களை கண்டித்த கிரண் பேடி
அந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை கேள்வி எழுப்பிய அவர், பிற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் தடுத்து நிறுத்தினார். ஹெல்மெட் போடாமல் வருபவர்கள் மட்டுமின்றி, அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் 3 பேராக சென்றவர்களையும் கீழே இறக்கி கடுமையாக கண்டித்தார்.
February 2019
இதனிடையே புதுச்சேரியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களை வீதியில் நின்றி கண்டித்த கிரண்பேடியை சமூக வலைத்தளத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.