Advertisment

புல்வாமா தாக்குதல் : 6.7 கோடி நிதி திரட்டி வீரர்களின் குடும்பத்திற்கு உதவிய தனி ஒருவன்

இந்திய அரசின் சார்பில் பாரத் கே வீர் என்ற இணையதளம் வழியாக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pulwama attack aftermath, Viveik Patel

Pulwama attack aftermath

Pulwama attack aftermath : கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அதில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய பள்ளியில் இலவச படிப்பினை தர முன்வந்தார்.

Advertisment

6.7 கோடி நிதி திரட்டிய இந்தியர்

பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் தங்களின் பங்கிற்கு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் இதர உதவிகளை செய்ய முன்வந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய இளைஞர் விவேக் படேல் ரூ.6.7 கோடியை தன்னுடைய முயற்சியால் திரட்டி இந்தியாவிற்கு அளித்துள்ளார். இவருக்கு வயது 26 ஆகும். குஜராத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

இந்திய அரசின் சார்பில் பாரத் கே வீர் என்ற இணையதளம் வழியாக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கைகொடுத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்

சர்வதேச டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்திய இணையதளத்தில் பணம் செலுத்த இயலவில்லை. அவர் மட்டும் அல்லாமல், அமெரிக்காவில் வாழும் அவருடைய நண்பர்களும் இந்த பிரச்சனையை சந்திக்க, அவர்கள் கொடுக்க முன்வந்த நிதியை ஒன்று திரட்டியுள்ளார் அவர். 9.23 லட்சம் டாலர்களை 23 ஆயிரம் இந்தியர்கள் அவரிடம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க : புல்வாமா தாக்குதல் : மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஏற்றுக் கொண்டது சீனா

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment