Advertisment

பஜாஜ் குழுமத் தலைவர் பஜாஜ் ராகுலின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், மத்திய அரசை விமர்சித்து, கார்ப்பரேட்டுகளிடையே நம்பிக்கை இல்லாதது குறித்து கவலை தெரிவித்தார். இதற்கு அடுத்த மறுநாளே, பல பாஜக அமைச்சர்கள், அந்தக் கருத்துக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகளில் ஒருவர் “இவை போலி கதைகளை புனைவதற்கான” முயற்சிகள் என்று பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul bajaj, rahul bajaj modi govt, economic times awards, et awards, rahul bajaj, rahul bajaj on amit shah, ராகுல் பாஜாஜ் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி, பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், bajaj group chairmaneconomic times awards, மத்திய அமைச்சர்கள் பதிலடி, பாஜக, நிர்மலா சீதாராமன், அமித்ஷா, பியூஷ் கோயல், ராகுல் காந்தி, காங்கிரஸ், et awards, rahul bajaj, rahul bajaj on amit shah, bajaj group chairman, rahul bajaj on pragya thakur, rahul bajaj on et awards, nirmala sitharaman, india gdp growth, india news, indian express, rahul bajaj on pragya thakur, rahul bajaj on et awards, india news, Tamil indian express

rahul bajaj, rahul bajaj modi govt, economic times awards, et awards, rahul bajaj, rahul bajaj on amit shah, ராகுல் பாஜாஜ் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி, பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், bajaj group chairmaneconomic times awards, மத்திய அமைச்சர்கள் பதிலடி, பாஜக, நிர்மலா சீதாராமன், அமித்ஷா, பியூஷ் கோயல், ராகுல் காந்தி, காங்கிரஸ், et awards, rahul bajaj, rahul bajaj on amit shah, bajaj group chairman, rahul bajaj on pragya thakur, rahul bajaj on et awards, nirmala sitharaman, india gdp growth, india news, indian express, rahul bajaj on pragya thakur, rahul bajaj on et awards, india news, Tamil indian express

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், மத்திய அரசை விமர்சித்து, கார்ப்பரேட்டுகளிடையே நம்பிக்கை இல்லாதது குறித்து கவலை தெரிவித்தார். இதற்கு அடுத்த மறுநாளே, பல பாஜக அமைச்சர்கள், அந்தக் கருத்துக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகளில் ஒருவர் “இவை போலி கதைகளை புனைவதற்கான” முயற்சிகள் என்று பதிலளித்துள்ளார்.

Advertisment

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒருவரின் சொந்த அபிப்ராயங்களை பரப்புவதை விட பதில் தேடுவது சிறந்தது” என்று கூறினார்.

நகரபுற விவகார மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “பஜாஜ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும், மற்றவர்களை சேர தூண்டவும் முடியும் என்பதே ஜனநாயகம்தான்” என்று தெரிவித்தார்.

பஜாஜின் கருத்துக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அளித்த, “எந்த அச்சமும் தேவையில்லை” என்ற பதிலையே வணிகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் குறிப்பிட்டார்.

மும்பையில் தி எகனாமிக் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை பஜாஜ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

“எங்கள் தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து யாரும் பேச மாட்டார்கள். நான் வெளிப்படையாகச் சொல்வேன்... ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் ... ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க முடியும். ... நீங்கள் (அரசாங்கம்) நல்ல வேலையைச் செய்கிறீர்கள், ஆனால், அதையும் மீறி நாங்கள் இல்லை என்று நாங்கள் உங்களை வெளிப்படையாக விமர்சித்தால் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை” என்று பஜாஜ் கூறினார்.

பஜாஜ்ஜின் கருத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு குறிப்பிட்ட வகையான சூழல் இருப்பதாக அவர் கூறினால், நாங்கள் சூழலை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது டுவிட்டர் பதிவில், ராகுல் பஜாஜ் உரையில் எப்படி பிரச்னை எழுப்பப்பட்டது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். கேள்விகளும் விமர்சனங்களும் கேட்கப்பட்டு பதிலளிக்கப்படுகின்றன; அடையாளம் காணப்படுகின்றன. கவனத்தை ஈர்க்கும்போது தேசிய நலனை பாதிக்கக்கூடிய ஒருவரின் சொந்த கருத்தை பரப்புவதை விட எப்பொதும் பதிலைத் தேடுவதே சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பூரி டுவிட்டரில், வெளியிட்ட தொடர்ச்சியான பதிவுக்குப் பிறகு, நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட் செய்துள்ளார். “பஜாஜின் கருத்துகளும் அதற்கு அமித்ஷாவின் பதிலும் ஜனநாயக விழுமியங்கள் உயிர்ப்புடன் செழித்து வளர்கின்றன என்பதைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உலகில் அச்சத்தால் நிர்வகிக்கப்படும் சமூகங்கள் உள்ளன. ஆனால், குடிமக்கள் போலி கதைகளை புனையக்குடிய மற்றும் அரசாங்கத்தில் அவதூறுகளை வீசக்கூடிய ஒரு சமூகத்தை அச்சத்தால் நிர்வகிக்கும் ஒரு சமூகமாக வகைப்படுத்த முடியாது. இது ஒழுக்கமற்ற அளவைக் கொண்ட ஒரு சமூகமாகும்” என்று பூரி பதிவிட்டுள்ளார்.

“ராகுல் பஜாஜ், அமித்ஷாவின் முகத்திற்கு நேராக எழுந்து நின்று சுதந்திரமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தலாம். மேலும், மற்றவர்களைத் தன்னுடன் சேர தூண்டலாம் என்பதே கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் இந்தியாவில் உயிர்ப்புடன் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாகக் குறிக்கிறது. ஜனநாயகம் என்பது இதுதான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்கள் தங்களை வெளிப்படுத்த பயப்படுகிறார்கள் என்ற ராகுல் பஜாஜின் கூற்றுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளதைப் பாருங்கள். உங்களுடைய கேள்வியைக் கேட்ட பிறகு, மக்கள் பயப்படுகிறார்கள் என்ற இந்த கூற்றை யாராவது நம்புகிறார்களா என்று நான் சந்தேகிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பஜாஜின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் பதிவுகள் ஆளும் அரசின் மீதான விமர்சனத்துக்கு பதிலளிக்கும் முயற்சியாகத் தோன்றினாலும், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பஜாஜ்ஜை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியுடன் தொடர்புபடுத்தும் முயற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா இரண்டு செய்தி வீடியோக்களை டுவிட் செய்துள்ளார். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தொழில்துறை அமைப்புகளுடன் உரையாடியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் பாராட்டியதை சுட்டிக்காட்டினார்.

ஒரு வீடியோவைக் குறிப்பிட்டு அமித் மால்வியாவின் பதிவில், “எனக்கு யாரையாவது புகழ்வது என்றால் கடினம். ராகுல் பஜாஜ்ஜுக்கு ராகுல் காந்தி விதிவிலக்கு. உங்கள் ஆடை மீது உங்கள் அரசியல் அடையாளத்தை அணிந்து கொள்ளுங்கள். அச்ச சூழ்நிலையை எல்லாவற்றையும் போல செயலற்ற தன்மைகளுக்கு பின்னால் மறைக்க வேண்டாம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித் மால்யாவின் மற்றொரு டுவிட்டில், “ராகுல் காந்தி ஒரு பேரழிவாக இருக்கிறபோது, ஒருவர் ராகுல் காந்தி மீது இப்படி ஒரு பார்வையைக் கொண்டிருந்தால், அவர் கற்பனை நூலை சுழற்றி தற்போதைய ஆட்சியை மோசமானது எனக் கருதுவது இயற்கையானது. உண்மையைச் சொன்னால் - உரிம அரசாங்கத்தில் செழித்த தொழிலதிபர்கள் எப்போதும் காங்கிரஸைக் கவனிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Bjp Amit Shah Nirmala Sitharaman Piyush Goyal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment