ராகுல் காந்தியின் அதானி வீடியோ வியூவர்ஷிப் முடக்கப்படுகிறதா? காங்கிரஸின் கூற்றை ஆராயும் யூடியூப்

அதானி குறித்த ராகுலின் இரண்டு வீடியோக்களைப் பார்ப்பவர்கள் முடக்கப்பட்டதாக சந்தேகிப்பதாக காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் யூடியூப்பிற்கு கடிதம் எழுதியிருந்தது.

Rahul Gandhi
Rahul Gandhi

தொழிலதிபர் கெளதம் அதானி குறித்த வீடியோக்களில் உள்ள பார்வைகள், மற்ற வீடியோக்களை விட மிகக் குறைவாக இருப்பதாக கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள கூற்றை, ஆராய்ந்து வருவதாக கூகுளின் வீடியோ தளமான யூடியூப் காங்கிரஸிடம் கூறியுள்ளது.

அதானி குறித்த ராகுலின் இரண்டு வீடியோக்களைப் பார்ப்பவர்கள் முடக்கப்பட்டதாக சந்தேகிப்பதாக காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் யூடியூப்பிற்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, மார்ச் 11 அன்று யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகனுக்கு எழுதிய கடிதத்தில் இந்தப் பிரச்சினையை முன்வைத்தார்.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில், தொழிலதிபர் கெளதம் அதானி, ஆளும் அரசாங்கத்தின் கூட்டுப் பிரச்சினையை எழுப்பினார். இந்த குறிப்பிட்ட வீடியோக்கள் அவரது YouTube சேனலில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன.

ஆனால் ராகுல் காந்தியின் இதேபோன்ற மற்ற வீடியோக்களை விட, இந்த வீடியோக்களின் பார்வைகள் மிகக் குறைவாக இருப்பதை அவரது குழு கண்டறிந்தது, ராகுலின் சமூக ஊடகக் குழு இது சற்று வினோதமாக இருப்பதாகவும், அதற்கான விளக்கத்தைத் தேடுவதாகவும் பிட்ரோடா வாதிட்டார்.

அவர்கள் யூடியூப்பின் சொந்த தரவு மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, அதானியின் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, அல்காரிதம் ரீதியாக அடக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகின்றனர். அவரது கூற்றுக்கு ஆதரவாக, பிட்ரோடா கட்சியின் தரவு பகுப்பாய்வு துறையால் செய்யப்பட்ட விளக்கக்காட்சியை அனுப்பினார்.

இது அதானி மற்றும் பாரத் ஜோடோ யாத்ரா, பாராளுமன்றத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் ராகுல் ஆற்றிய உரைகளின் மற்ற வீடியோக்கள் குறித்த பார்வையாளர்களின் தரவை ஒப்பிட்டது.

காங்கிரஸின் இந்த கூற்றை இப்போது யூடியூப் குழு  ஆய்வு செய்து வருகிறது.

பிட்ரோடா மற்றும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு துறைத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் யூடியூப்பின் உயர் அதிகாரிகளுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத் ஜோடோ யாத்ரா வீடியோ, அதானியின் முதல் வீடியோவை விட குறைந்த  பாசிட்டிவ் இன்டிரெக்ஷன்ஸ் கொண்டுள்ளது, ஆனால் ஐந்து மடங்கு அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கூறியது.

யாத்திரையின் கன்டெய்னர் வீடியோ, 83,602 பாசிட்டிவ் இன்டிரெக்ஷன்ஸ் கொண்டுள்ளது, அதேசமயம் அதானியின் முதல் வீடியோ – ‘மித்ர் கால் எபிசோட் 1’ – 99,197 இன்டிரெக்ஷன்ஸ் கொண்டிருந்தது.

ஆனால் கன்டெய்னர் வீடியோவின் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் ஒப்பிடுகையில், ‘மித்ர் கால்’ வீடியோ 4.78 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றது.

இதேபோல், அதானியின் இரண்டாவது வீடியோ “கேம்பிரிட்ஜ் வீடியோவை விட இருமடங்கு இன்டிரெக்ஷன்ஸ் கொண்டுள்ளது, ஆனால் அதே எண்ணிக்கையிலான பார்வைகள் உள்ளன என்று கட்சி கூறியது.

 கேம்பிரிட்ஜ் வீடியோ 28,360 பாசிட்டிவ் இன்டிரெக்ஷன்ஸ் கொண்டிருந்தாலும், ‘மித்ர் கால் எபிசோட்-2’ 49,053 பாசிட்டிவ் இன்டிரெக்ஷன்ஸ் கொண்டிருந்தது. இரண்டு வீடியோக்களும் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

எங்கள் கணிப்பு என்னவென்றால், அதானி வீடியோவும், இன்டிரெக்ஷன்ஸ் மெட்ரிக்ஸ் அடிப்படையில் 8 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால் 2.6 லட்சம் பார்வைகள் மட்டுமே உள்ளன, என்று காங்கிரஸ் தனது விளக்கக்காட்சியில் தெரிவித்துள்ளது.

எனவே அல்காரிதமிக் அடக்குமுறையின் தெளிவான ஆதாரம், பெரும்பாலான மக்கள் YouTube பிரவுஸர் அம்சத்தின் மூலம் வீடியோக்களைப் பார்க்கிறார்கள், அங்கு YouTube முகப்புப்பக்கம், வீடியோக்களையும் பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களையும் காட்டுகிறது.

பிப்ரவரி 9 முதல் ராகுல் காந்தியின் சேனலில் பிரவுஸ் அம்சம் முடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வீடியோக்களுக்கான பிரவுஸ் அம்சத்தை யூடியூப் அல்காரிதம் அடக்கியுள்ளது, என்று அக்கட்சி கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi adani video youtube ceo neal mohan congress

Exit mobile version