scorecardresearch

தண்டனையை நிறுத்தக் கோரிய ராகுல் காந்தி மனு தள்ளுபடி: பா.ஜ.க, காங்கிரஸ் கருத்து

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

rahul gandhi, rahul gandhi defamation case, rahul gandhi news, rahul gandhi surat court order, rahul gandhi conviction, rahul gandhi jail sentence, congress news
ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘மோடி குடும்பப் பெயர்’ குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து குறித்து பா.ஜ.க-வின் பூர்ணேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “சட்டத்தின் கீழ் எங்களுக்கு இன்னும் எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.” என்று கூறினார். இதனிடையே, “ஓ.பி.சி சமூகத்திடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பா.ஜ.க வலியுறுத்தியது.

முன்னதாக, சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. அவரது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வரும் வரை, மார்ச் 23-ம் தேதி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தது. 2019-ம் ஆண்டு தேர்தல் பேரணியின் போது, ​“எல்லா திருடர்களின் பெயருக்கு பின்னால் மோடி என்று எப்படிப் பொதுப் பெயராக வைத்திருக்கிறார்கள்” என்ற அவரது கருத்துக்காக ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் லோக்சபா எம்.பி-யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல எதிர்க்கட்சிகள் அரசை விமர்சனம் செய்தனர்.

“இந்த குற்றச்சாட்டுக்கு தடை விதிப்பதற்கான விதிவிலக்கான சூழ்நிலைகள் எதையும் ராகுல் காந்தியால் காட்ட முடியவில்லை என்று சூரத் நீதிமன்றம் கூறுகிறது. கிரிமினல் அவதூறுக்காக இரண்டாண்டு சிறைத்தண்டனை பெறுவது விதிவிலக்கானதல்லவா? பாராளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டால் போதுமானதா” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பி வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்த சிறிது நேரத்திலேயே, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். “காங்கிரஸ் இப்போது இதையும் பழிவாங்குமா? நீதிமன்றங்களில் மீண்டும் கேள்வி எழுப்புவார்களா? கடைசியாக அவர்கள் தங்கள் ஆணவத்தைக் காட்டி மன்னிப்புக் கேட்பார்களா? நீதித்துறையை கேள்வி கேட்பதை விட ஓ.பி.சி சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

ராகுல் காந்தியைத் தாக்கி கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, “ஓ.பி.சி சமூகத்தை அவமதித்தாலும், அவர்கள் அனைவரையும் சோர் என்று அழைத்தார். ராகுல் காந்தி வெட்கப்படத்தக்க வகையில் தொடர்ந்து எதிர்க்கிறார்… அவருடைய திமிர்பிடித்த மனப்பான்மைதான் தண்டனையை பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய அனில் கே ஆண்டனி, “நீங்கள் ஒரு சாவர்க்கர் அல்ல, ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டீர்கள் என்று ஆணவத்துடன் பதவியை இழப்பதற்கு பதிலாக ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் மீதான உங்கள் வெறுப்பின் காரணமாக ஒட்டுமொத்த ஓ.பி.சி ‘மோடி’ சமூகத்தையும் தவறாகப் பேசியதற்காக உங்கள் தவறுக்கு நீங்கள் மன்னிப்புக் கேட்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi defamation case surat court dismsses plea congress and bjp leaders comments

Best of Express