Advertisment

சத்தீஸ்கர் காங்கிரஸுக்குள் பூசல்: ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல் - சிங் தியோ சந்திப்பு

பூபேஷ் பாகேலும் சிங் தியோவும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்கிற விவகாரத்தில் அரசாங்கத்தை குழப்பத்தில் தள்ளுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi meets, congress, chhattisgarh CM Baghel and minister Singh Deo differences, chhattisgarh state congress, சத்தீஸ்கர் காங்கிரஸுக்குள் பூசல், ராகுல் காந்தி, சத்தீஸ்கர், முதல்வர் பூபேஷ் பாகேல், அமைச்சர் சிங் தியோ, chhattisgarh CM Baghel, chhattisgarh congress

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பூசலைத் தீர்க்க அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இருப்பினும், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியை தக்கவைத்து வரும் சிங் தியோவிடம் பொறுப்பை ஒப்படைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Advertisment

2018 டிசம்பர் மாத நடுவில், பூபேஷ் பாகேலை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு எடுப்பதற்கு முன்னதாக, ராகுல் காந்தி, சிங் தியோ மற்றும் பாகேல் இடையே 5 ஆண்டு கால ஆட்சியை பாதியாக பிரித்து கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தபடி, ராகுல் காந்தி இரு தலைவர்களுடனும் - தனித்தனியாக - திங்கள்கிழமை அவரது இல்லத்தில் நடத்திய சந்திப்புகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்தது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பிஎல் புனியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பூபேஷ் பாகேலும் சிங் தியோவும் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்கிற விவகாரத்தில் அரசாங்கத்தை குழப்பத்தில் தள்ளுவதற்காக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.

இவர்கள் இருவரும் இன்னும் சில நாட்கள் டெல்லியில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. மேலும், சந்திப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. தலைமைப் பிரச்சினை பற்றி அவர் விவாதிக்க மறுத்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி விவகாரம் பற்றி கேட்டபோது, ​​அவர் கூறுகையில், ஊடகங்களில் இது பற்றி ஊகங்கள் இருக்கிறது. அது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. பூபேஷ் பாகேல் முதல்வராக இருப்பாரா என்று கேட்டதற்கு, அவர் முதல்வராகதான் இருக்கிறார் என்று கூறினார்.

இந்த விவாதம் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் பற்றியது என்று பூபேஷ் பாகெல் கூறினார்; சிங் தியோவும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதித்ததாகக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ இடையே சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சிங் தியோவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், கட்சித் தலைமை, 2018ல் தேர்தல் வெற்றியின்போது, பாகேல் மற்றும் சிங் தலைமையில் ஐந்து ஆண்டு கால ஆட்சியை பிரிது அளிக்க ஒப்புக்கொண்டனர். பாகேல் இது போன்ற ஒப்பந்தம் எதுவுமில்லை என்று பகிரங்கமாக மறுத்துள்ளார்.

“எங்கள் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் என்ன சொன்னாலும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம்” என்று சிங் தியோ சந்திப்புக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார். தலைமையின் முடிவு பின்பற்றப்படும் என்றும் பாகெல் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment