Advertisment

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வெளிநாட்டினர் : மத்திய அரசை விமர்சித்த ராகுல்

இந்த போராட்டத்திற்கு ஸ்வீடன் டீன் பருவநிலை மாறற் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வெளிநாட்டினர் : மத்திய அரசை விமர்சித்த ராகுல்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இந்த போராட்டம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

Advertisment

இநத போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக கடந்த 26-ந் தேதி (குடியரசுதினம்) அன்று டெல்லி செங்கோட்டை நோக்கிய விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். எதிர்பாராத விதமாக இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விவசாயிகளை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை முடக்கி விட்டனர். இந்த வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதன் காரணமாக டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவை தடை செய்யப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஸ்வீடன் டீன் பருவநிலை மாறற் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் கருத்தக்கு எதிர்ப்பு தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு விஷயத்தில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் கருத்து கூறவேண்டாம் எனவும், இது தொடர்பாக சர்வதேச பிரபலங்களிளன் கருத்துக்களை கண்டிக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,.

சர்வதேச அளவில் இந்தியாவின் உருவம் விவசாயிகள். அவர்களை இப்படி துன்புறுத்துவது நியாமற்றது. இது “நிச்சயமாக இந்தியாவின் நற்பெயருக்கு மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்தும். நாம் விவசாயிகளிடம் எப்படி நடந்துகொள்கிறோம், மக்களை எப்படி வழி நடத்துகிறோம், பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொருத்துதான் இந்தியாவின் வெற்றி அமைகிறது. நமது மிகப்பெரிய பலம் விவசாயிகள் தான். ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ், அவர்களின் மனநிலையை சிதைந்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு வேளாண் சட்டங்கள் குறித்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சினையைத் தீர்க்க போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை என்றும் இந்தியாவுக்கு இந்த நிலைமை "நல்லதல்ல" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் குரல்களை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியாட்டினர் தங்களது கருத்தக்களை தெரிவித்த சில நிமிடங்களில் ராகுல்காந்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment