சிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் - ராகுல் காந்தி

நரேந்திர மோடியின் கேள்விக்கு பதில் கூறிய ராகுல் காந்தி

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி யாருக்காக உழைக்கின்றது என்ற கேள்வி மிக தீவிரமாக கேட்கப்பட்டு வருகிறது.

அசம்கர் பகுதியில் ஜூலை 15ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது ”காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டும் தான் உதவுமா, அக்கட்சியில் பெண்களுக்கான இடம் இருக்கிறதா இல்லையா?” என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக உருது பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “காங்கிரஸ் கட்சியினர் எப்போதுமே இஸ்லாமிய கட்சியினர் தான். அதனால் தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த நாட்டின் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்குத் தான் முதலுரிமை என்று கூறினார்” என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு வர இருக்கும் தேர்தல் காரணமாக தான் இவர் இப்படி பேசி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறார் என்று காங்கிரஸ் பதில் குற்றச்சாட்டினை பதிவு செய்தது.

இது தொடர்பாக இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் ராகுல்.

நான் இந்த இனத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை அவன் உடன் இருப்பேன். அவர்கள் எந்த மதத்தினாராய் இருந்தாலும் சரி, எந்த இனத்தினராய் இருந்தாலும் சரி, எந்த கடவுள் நம்பிக்கையை கொண்டிருப்பரவாய் இருந்தாலும் சரி.

நான் அவர்களின் வெறுப்பினை போக்கி, அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறேன்.

நான் அனைவரையும் நேசிக்கின்றேன்.

ஏன் எனில் நான் தான் காங்கிரஸ் என்று பொருள்படும் தொணியில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இந்த பதிவிற்கு பதில் கூறிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர், ராகுலின் பதில் குழப்பங்களை தீர்ப்பதற்கு பதிலாக அதிக குழப்பத்துடன் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close