ரயிலில் பயணிகளின் தூங்கும் நேரம் குறைப்பு

ரயில் பயணங்களின் போது, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போரின் தூங்கும் நேரம், எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணங்களின் போது, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போரின் தூங்கும் நேரம், எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போர் தூங்கும் நேரத்தை ரயில்வேத் துறை குறைத்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். முன்னதாக, இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஒன்பது மணி நேரம் தூங்க என்ற முறை தற்போது மாற்றப்பட்டு எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள ரயில்வேத் துறை, நேரம் கடந்து தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தூங்கினால் அவர்களுக்கு சக பயணிகள் ஒத்துழைப்பு தருமாறும் ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

×Close
×Close