Advertisment

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதவி பறிப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக சச்சின் பைலட் யாரும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வருகிறார்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதவி பறிப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில பாஜக இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், சொகுசு விடுதியில் நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட முதல் அறிக்கையில், சச்சின் பைலட்டின் மொத்த ஆதரவாளர்கள் முகாமும் பாஜக முகாமுடன் தொடர்பில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த கெலாட் பாஜக அரசுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டினார். “சச்சின் பைலட்டின் கைகளில் எதுவும் இல்லை, இந்த நாடகத்தை நடத்தி வருவது பாஜக தான். பாஜக அந்த ரிசார்ட்டை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்கள். ” என்று அசோக் கெலாட் கூறினார். மேலும், பைலட்டுக்கு எதிராக கட்சி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கெலாட் தெரிவித்தார்.

மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு 7:30 மணிக்கு முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் கூடுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தது. மேலும், சச்சின் பைலட்டின் ஆதரவு அமைச்சர்களான விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கியது. கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டசரா பைலட்டுக்கு பதிலாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார். ஹேம் சிங் செகாவத் சேவா தளத்தின் மாநிலத் தலைவராக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து சில நிமிடங்களில் சச்சின் பைலட், “உண்மை பிரச்னைக்குள்ளாகலாம், ஆனால், தோற்கடிக்க முடியாது.” என்று டுவிட் செய்தார்.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு இடையே, சச்சின் பைலட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் முகாம் திங்கள்கிழமை இரவு குறைந்தது 16 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டது. திங்கள்கிழமை ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றம் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பைலட் ஆதரவாளர்கள் சிறுபான்மையினராக குறைக்கப்பட்டனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் தொடர்பு கொண்டு அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பைலட்டுடன் பேசியதாகவும், முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சச்சின் பைலட்டின் குறைகள் கட்சி மட்டத்தில் தீர்க்கப்படும் என்று அவருக்கு அவர்கள் உறுதியளித்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தவிர, அகமது படேல், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பி.சிதம்பரம் மற்றும் ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் ஆகியோர் சச்சின் பைலட்டுடன் பேசியதாக தெரியவதுள்ளது.

இதனிடையே, ஜெய்ப்பூரில் ஒரு மாற்று ஏற்பாட்டை அமைப்பதற்கான வாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால், கட்சி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. “நாங்கள் நிலைமையை மட்டுமே கவனித்து வருகிறோம், இந்த விளையாட்டு இன்னும் பாஜகவுக்கு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை” என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுடன் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் மோதல் காணப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பைலட்டுக்கு ஆதரவளிப்பதாகவும் அதனால், அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மையினராகக் குறைக்கப்பட்டதாக சச்சின் பைலட் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

சச்சின் பைலட்டின் செய்தித் தொடர்பாளரான, லோகேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் நாளை நடைபெறவிருக்கும் காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்” என்றார்.

கடந்த இரண்டு நாட்களாக சச்சின் பைலட் யாரும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வருகிறார், அவருக்கு ஆதரவளிக்கும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தேசிய தலைநகர் டெல்லியில் தங்கியிருந்தனர். சமூக ஊடகங்களிலும் அவருடைய செயல்பாடு இல்லை. காங்கிரஸ் தலைவர்களின் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும், அவரது மௌனம் அவரது அடுத்த நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ள டெல்லியின் ஊகங்களைத் தூண்டியது. அவரிடம் பாஜகவில் சேருகிறீர்களா என்று கேட்டபோது, சச்சின் பைலட் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “நான் பாஜகவில் சேரவில்லை” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajasthan All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment