2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை... ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜக தலைவர் அமித் ஷா தேர்தலுக்கான களப்பணி பொறுப்புகளை ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு நியமித்திருக்கிறார்.

2019ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாஜக, கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் : ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லிக்கு முக்கிய பொறுப்பு

இதற்கான அறிவிப்பினை கட்சித் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதன்படி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட 20 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவின் தலைவராக ராஜ்நாத் சிங் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் குழுவில், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், தாவர் சந்த் கெலாத், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி, கே.ஜே. அல்போன்ஸ், கிரன் ரிஜிஜு, பீகார் அமைச்சர் சுஷில் மோடி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், உ.பி துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா, மூத்த தலைவர்கள் அர்ஜுன் முண்டா, ராம் மாதவ், புபேந்திர யாதவ், நாராயண் ரானே, மீனாட்சி லேக்கி, சஞ்சய் பஸ்வான், ஹரி பாபு மற்றும் ராஜேந்திர மோகன் சிங் சீனா ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இவர்களுள், கட்சிக்கான பிரச்சார உத்திகளை வகுப்பதற்கான குழுவின் தலைவராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 17 குழுக்களை அறிவித்துள்ள அமித் ஷா, சமூக அமைப்புகளை தொடர்பு கொள்வதற்கான குழுவின் தலைவராக நிதின் கட்கரியையும், ஊடகங்களைக் கையாள்வதற்கான குழுவின் தலைவராக ரவி சங்கர் பிரசாத்தையும் நியமித்துள்ளார்.

இதே போல், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜாவேத்கர் உள்பட பலர் பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. குறிப்பாக,மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தலைவர்களின் உரை தயாரிப்பு குழு தலைவராக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ஊடக குழு தலைவராக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close