Advertisment

டோக்லாம் விவகாரத்தில் சீனா பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கும்: ராஜ்நாத் நம்பிக்கை

சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக, அந்நாடு விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக, அந்நாடு விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.

சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,"சிக்கன்ஸ் நெக்" அல்லது "சிலிகுரி காரிடார்" எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.

இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, எல்லையில் தனது படைகளை திரும்பப் பெற்று எண்ணிக்கையை குறைத்துள்ளது என சீனாவும், படைகள் திரும்பப் பெறப்படவில்லை என இந்தியாவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், இரு நாட்டு படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த விரோதப் போக்கும் இல்லை என இந்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டோக்லாம் விவகாரம் தொடர்பாக சீனா விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். "டோக்லாம் விவகாரத்தில் ஏதோ முட்டுக் கட்டை உள்ளது. அது உடைக்கப்பட்டு, விரைவில் சீனா பேச்சுவார்த்தையை தொடங்கும்" என ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

India China Home Minister Rajnath Singh Doklam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment