Advertisment

இந்தியாவிடம் வழங்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்: வீடியோ

Rajnath Singh takes off in Rafale: பிரான்ஸில் உள்ள மெரிக்னக்கில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். அவரை, டசால்ட் ஏவியேஷனின் தலைமை சோதனை பைலட் பிலிப் டுச்சாட்டோ விமானத்தில் அழைத்துச் சென்றார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajnath singh rafale sortie, rajnath singh, rafale, Defence Minister Rajnath Singh, rafale sorties, ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமான, ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங், indian air force, rajnath in paris, Dassault Aviation, Tamil indian express

rajnath singh rafale sortie, rajnath singh, rafale, Defence Minister Rajnath Singh, rafale sorties, ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமான, ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங், indian air force, rajnath in paris, Dassault Aviation, Tamil indian express

Rajnath Singh takes off in Rafale: பிரான்ஸில் உள்ள மெரிக்னாக்கில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். அவரை, டசால்ட் ஏவியேஷனின் தலைமை சோதனை பைலட் பிலிப் டுச்சாட்டோ விமானத்தில் அழைத்துச் சென்றார்.

Advertisment

ராஜ்நாத் சிங் முதல் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெறுவதற்கு பிரான்ஸில் உள்ளார். இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.

பிரான்சின் போர்டியாக்ஸுக்கு அருகிலுள்ள மெரிக்னாக் நகரில் உள்ள பிரெஞ்சு விமான உற்பத்தி நிறுவனம் டசால்ட் ஏவியேஷனின் தொழிற்சாலையில் இந்திய விமானப்படையின் முதல் ரஃபேல் போர் விமானத்தை வழங்க ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். ரஃபேல் போர் விமானங்களைப் பெற்ற பின்னர் அவர், தசரா விழாவை முன்னிட்டு விமானத்துக்கு ஆயுத பூஜை செய்தார். இன்று தற்செயலாக இந்தியா 87வது விமானப் படை விழாவை கொண்டாடுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்குள் பாதுகாப்புத் துறை அமைச்சர் இரண்டாவது முறையாக ஜெட் போர் விமானத்தில் பறந்துள்ளார். இதற்கு முன்னதாக அவர், பெங்களூருவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எல்.சி.ஏ தேஜாஸில் பறந்தார். பிரான்ஸில் ரஃபேல் போர் விமானத்தில் பறந்ததன் மூலம், 2020 மே மாதத்திற்குள் இந்திய வானத்தில் பறக்கவிருக்கும் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங்.

முதல் ரஃபேலைப் பெற்ற பிறகு, ராஜ்நாத் சிங் இதை இந்தோ-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு புதிய மைல்கல் என்று கூறினார். மேலும், அவர் “ரஃபேல் விமானங்களை வழங்குவது கால அட்டவணையில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எங்கள் இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் மேலும் அதிகரிக்க விரும்புகிறேன்.” என்றார்.

publive-image

முன்னதாக, ராஜ்நாத் சிஞ் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் ராஜாங்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதங்களை நடத்தினார். பின்னர், அவர் ஒரு பிரெஞ்சு இராணுவ விமானத்தில் மெரிக்னக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அதிகாரப்பூர்வமாக ரஃபேல் ஜெட் விமானத்தைப் பெற்றார். மக்ரோனுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, சிங் பிரெஞ்சு ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடனும் கலந்துரையாடினார். பிரான்ஸ் அதிபர் பாதுகாப்பு ஆலோசகரான அட்மிரல் பெர்னார்ட் ரோஜலும் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தார்.

ரஃபேல் விமானத்தில் பறந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இது மிகவும் சௌகரியமான நல்ல விமானமாக உள்ளது. இந்த தருணம் எதிர்பார்க்காதது. ஒரு நாள் சூப்பர் சோனிக் விமானத்தில் பறப்பேன் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை. 2021 பிப்ரவரியில் 18 விமானங்கள் அளிக்கப்படும். 2022 ஏப்ரல் - மேவில் 36 விமானங்கள் அளிக்கப்படும். இது நம்முடைய தற்காப்புக்காக மட்டும்தான். எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக அச்சுறுத்த அல்ல. என்று கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment