Advertisment

ஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு (வீடியோ)

Flying snake : அரிய வகை பறக்கும் பாம்பு போன்ற வனவிலங்ககுகளை, நாம் வைத்திருத்தல், அதை வைத்து சம்பாதித்தல் உள்ளிட்டவைகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
flying snake,wildlife protection act,Bhubaneswar

flying snake,wildlife protection act,Bhubaneswar,Odisha, ஒடிசா, பறக்கும் பாம்பு, அரிய வகை பாம்பு, வனவிலங்கு சட்டம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அரிய வகை பாம்பை வைத்து வித்தை காட்டி வந்தவரிடமிருந்து பாம்பு மீட்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றன.

Advertisment

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் பகுதியில், அரிய வகை பறக்கும்பாம்பை வைத்து ஒருவர் வித்தை காட்டி பணம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் உடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரிடம் இருந்து அரிய வகை பாம்பை மீட்டனர்.

அந்த பாம்பு மிக சிறியதாகவும், அதேநேரம் அதிக சீற்றத்துடனும் காணப்பட்டது. அந்த நபரின் கைக்குள் அடங்கும்வகையில் அந்த பாம்பு இருந்தது.அதை மீட்ட வனத்துறை, மீண்டும் காட்டுப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுபோன்ற அரிய வகை பறக்கும் பாம்புகள், தெற்காசிய வனப்பகுதிகளில் அதிகமாக காணப்பட்டு வந்தன. தற்போது அது அழியும் நிலையில் உள்ளது. மனிதர்களுக்கு தீங்கு இழைக்காத இந்த பாம்பு வகை பல்லி, தவளை, சிறு பறவைகள், வெளவால்கள் உள்ளிட்டவைகளை உணவாக உண்டு உயிர் வாழ்கின்றன.

அரிய வகை பறக்கும் பாம்பு இதுபோன்ற வனவிலங்ககுகளை, நாம் வைத்திருத்தல், அதை வைத்து சம்பாதித்தல் உள்ளிட்டவைகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment