ஐபிஎல் வீரர்களையும் அதற்கு அனுமதியுங்கள்.. பிரதமர் மோடியிடம் அஸ்வின் கோரிக்கை!

வாக்களிக்க அனுமதிக்கும் வசதியை ஏற்படுத்தி தாருங்கள்

Ashwin twitter : தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வைத்த கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில் தொடக்க கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக பணிகளை கவனித்து வருகிறார். ட்விட்டர் பக்கத்தில் சவுக்கிதார் என பெயர் மாற்றம் தொடங்கி பிரபலங்களை ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து தேர்தல் குறித்த விழிப்புண்ர்வை மக்களிடம் ஏற்படுத்தும் மாறு கோரிக்கை வரை அவரின் தேர்தல் வியூகம் பரந்து விரிந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், நேற்றைய தினம் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் புவனேஷ் குமார், ரவிசந்திர அஸ்வின், ஷீகர் தவான் ஆகியோரின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, அவர்களிடன் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். அதாவது, முடிந்த வரை நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் மற்றும் கடமையை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனுமான ரவீசந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இதுக் குறித்து அஸ்வின் பதிவிட்டுள்ள ட்விட்டில், “தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை என்ற உணர்வு எப்போதும் எனக்கு தோன்றும். நாட்டில் உள்ள அனைவரும் இதனை மனதில் கொண்டு நாட்டின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் மறவாமல் வாக்களித்து நாட்டிற்கு தேவையான ஜனநாயக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” இதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதற்கு அடுத்தப்படியாக அஸ்வின் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீடில், பிரதமர் நரேந்திர மோடிடை டேக் செய்து, இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் ஐபிஎல் வீரர்களும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வசதியை ஏற்படுத்தி தாருங்கள் “ என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close