Advertisment

எஸ்.சி எஸ்.டி பதவி உயர்வு விவகாரம் : முக்கிய நிபந்தனை நீக்கப்பட்டதை வரவேற்கும் தலைவர்கள்

க்ரீமி லேயர் முறையை நடைமுறைப்படுத்த வலுக்கிறது எதிர்ப்பு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எஸ்.சி மற்றும் எஸ்.டி அரசு பதவி உயர்வு இட ஒதுக்கீடு, தொல். திருமாவளவன்

எஸ்.சி மற்றும் எஸ்.டி அரசு பதவி உயர்வு இட ஒதுக்கீடு

எஸ்.சி மற்றும் எஸ்.டி அரசு பதவி உயர்வு இட ஒதுக்கீடு : அரசு பதவிகளில் பதவி உயர்வு அளிக்கப்படும் போது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு முறையை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. மேலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணிகளில் போதிய பிரதிநித்துவம் இல்லை என்பதையும் மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என்று தீர்ப்பினை வழங்கியது.

Advertisment

இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல்கள் செய்தனர். மேலும் இந்த வழக்கினை 7 பேர் கொண்ட சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.  26/09/2018 அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பினை வழங்கியது. கடந்த வழக்கின் போது உச்ச நீதிமன்றம் கேட்ட தரவுகளை மாநில அரசுகள் தர மறுத்துவிட்டது.

இந்நிலையில்  அதில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதற்காக கேட்கப்பட்ட தரவுகளை இனி தயாரிக்க வேண்டாம் என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில மத்திய அரசுகள் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படலாம்.  மேலும் இந்த வழக்கினை சாசன அமர்விற்கு மாற்ற முடியாது என்று கூறி தீர்ப்பினை வழங்கினார்கள்.

க்ரீமி லேயர் குறித்து உச்ச நீதிமன்றம்

க்ரீமி லேயர் என்ற முறை அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. ஓபிசி வகுப்பில் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்குமானால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த க்ரீமி லேயர் என்பது எப்படி எஸ்.சி மற்றும் எஸ்.டி இனத்தவருக்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

வரவேற்று பேசிய தலைவர்கள் :

விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இந்த  தீர்ப்பினை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எஸ்.சி மற்றும் எஸ்.டி அரசு பதவி உயர்வு இட ஒதுக்கீடு வரவேற்கும் தலைவர்கள்

இது குறித்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் “க்ரீமி லேயர் குறித்த தீர்ப்பினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை காண காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் உதித் ராஜ் இந்த தீர்ப்பினை வரவேற்று பேசியிருக்கிறார். ஆனால் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரின் ஆல் இந்தியா கான்பிடரேஷன் மூலமாக க்ரீமி லேயரை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் “எஸ்.டி மற்றும் எஸ்.சி இனத்தவரின் சமுதாய பின்புலத்தை பற்றிய தரவுகளை மாநில அரசு இனி தயாரிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறும் போது அனைவரையும் பின்தங்கிய வகுப்பினருக்கு மாற்றிவிடுகிறார்கள். பின்தங்கிய வகுப்பினருக்கு எப்படி க்ரீமி லேயர் முறை சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

க்ரீமி லேயர் முறை வேண்டாம்

பதவி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டினை மறுத்திருப்பதை நான் வரவேற்கிறேன் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் சேர்மென் எஸ்.கே. தொராட் கூறியிருக்கிறார்.

இது குறித்து மேலும் பேசிய தொராட் “பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடமும் இன்றும் தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. க்ரீமி லேயர் முறையை உருவாக்கினால் நிச்சயம் எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டதோ அதன் அடிப்படையையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்று கூறினார். மேலும் தற்போது வரை 11 ஆயிரம் வழக்குகள் பதவி உயர்வு என்று வரும் போது சாதியில் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்றே பதியப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

அனைத்திந்திய தலித் உரிமைகள் அமைப்பின் தலைவர் ஆனந்த ராவ் இது குறித்து பேசுகையில் க்ரீமி லேயர் என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி இனத்தவர் மனங்களை நிச்சயம் புண்படுத்தும். மேலும் 100 இடஒதுக்கீடு அதன் பலனை அடைந்திருந்தால் மட்டுமே க்ரீமி லேயர் முறையை நடைமுறைப்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment